நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் - பிசிசிஐக்கு இத்தனை கோடிகள் இழப்பா?
ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டதால் பிசிசிஐக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டிகள் நிறுத்தம்
2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர், கடந்த மார்ச் 22 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்த நிலையில், கடந்த மே 8 ஆம் திகதி, பஞ்சாப் தர்மசாலா மைதானத்தில், பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்று கொண்டிருந்தது.
அப்போது, பாகிஸ்தான் ராணுவம் பஞ்சாப் எல்லை பகுதிகளில் தாக்குதல் நடத்தியதை, போட்டி இடையிலேயே நிறுத்தப்பட்டு, ரசிகர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
பதற்றம் அதிகரித்ததால், ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது.
தற்போது இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ள நிலையில், எஞ்சியுள்ள 16 போட்டிகளை தொடர்ந்து நடத்த, அணி உரிமையாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினருடன் பிசிசிஐ ஆலோசனை நடத்தி வருகிறது.
இடைநிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள், மீண்டும் மே 16 முதல் தொடங்கலாம் அல்லது தொடர் ஆகஸ்ட் - செப்டம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
நிறுத்தப்பட்டதால் இழப்பு
இதனிடையே, ஒரு வார காலத்தில் 5 முதல் 7 போட்டிகள் நிறுத்தப்பட்டால், பிசிசிஐ ரூ.300 கோடி முதல் ரூ.420 கோடி வரை இழப்பை சந்திக்க நேரிடும் என கூறப்படுகிறது.
இந்த இடைநிறுத்தம் நீட்டிக்கப்பட்டாலோ ஐபிஎல் தொடர் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டாலோ இந்த இழப்பு இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு போட்டிக்கு ரூ.100 கோடி முதல் ரூ.120 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
TATA போன்ற முக்கிய ஸ்பான்சர்களும், JioHotstar போன்ற ஒளிபரப்பாளர்களும் இழப்பை சந்தித்துள்ளனர். போட்டிகள் நிறுத்தப்பட்டதால், விளம்பரம் மூலம் வரவேண்டிய வருவாய் அந்த நிறுவனங்களுக்கு கிடைக்காது.
ஒவ்வொரு அணிக்கும் ஸ்பான்சர்கள், விளம்பர வருவாய், டிக்கெட் புக்கிங் மற்றும் ஒளிபரப்பில் வரும் கணிசமான தொகை ஆகியவை இந்த நிறுத்தப்பட்ட காலத்தில் இழப்பை கொடுக்கும்.
மீண்டும் ஐபிஎல் தொடங்கினாலும், போட்டி அட்டவணை, மைதானம் மாற்றங்கள் காரணமாக வருவாய் இழப்பை அவர்கள் கட்டாயம் சந்திப்பார்கள்.
காப்பீட்டு நிறுவனங்கள் அதற்குரிய இழப்பீடை தந்தாலும், இந்த பிரச்சனையில் பிசிசிஐ பெரும் இழப்பை சந்திக்கும் என கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |