ஒருவர் வீட்டில் எவ்வளவு பணத்தை வைத்துக்கொள்ள முடியும்? முழு விபரம் இதோ
வங்கிகளில் பணத்தை வைப்பதை காட்டிலும் ஒரு சிலர் வீட்டில் பணத்தை சேமித்து வைப்பது வழக்கம்.
அவ்வாறு சேமித்தாலும் எவ்வளவு பணத்தை வீட்டில் வைத்துக்கொள்ள முடியும் என குறித்து பார்க்கலாம்.
ஒருவர் வீட்டில் எவ்வளவு பணத்தை வைத்துக்கொள்ள முடியும்?
பொதுவாகவே வங்கிகளில் பலரும் பணத்தை சேமித்து வைப்பார்கள். ஆனால் பெண்கள் பெருமளவில் வீட்டில் சேமித்து வைப்பது வழக்கம்.
Digital பரிவர்த்தனை மற்றும் வங்கி போன்ற விடயங்கள் பற்றி அறியாத சிலர் வீட்டிலேயே சேமித்து வைப்பது வழக்கம்.
அவ்வாறு சேமித்தாலுமே வீட்டில் எவ்வளவு தொகையை வைத்திருக்க முடியும் என்று குறித்து தெரியுமா?
ஒருவர் எவ்வளவு வேண்டுமானாலும் வீட்டில் பணத்தை வைத்திருக்கலாம்.
ஆனால் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி ஏன் பணத்தை எடுக்கிறார்கள் என்ற கேள்வி உங்களிடத்தில் எழும்.
நீங்கள் வைத்திருக்கும் பணத் தொகைக்கு கட்டாயம் கணக்கு காட்ட வேண்டும். அதிகளவில் பணத்தை வைத்திருந்தால் கட்டாயம் அதற்கான ஆவணம் உங்களிடத்தில் இருக்க வேண்டும்.
வருமான வரித்துறை ஒருவர் இவ்வளவு தான் பணம் வைத்திருக்க வேண்டும் என்ற வரம்பு விதிக்கவில்லை. ஆனால் பொருத்தமான ஆவணங்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
மேலும் ஒருவர் வீட்டில் சேமித்து வைத்திருந்த பணத்தை வங்கியில் வைக்கிறார் என்றால், ரூ.50,000 அல்லது அதற்கு மேற்பட்ட தொகைக்கு பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு தகவலை கட்டாயம் வழங்க வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |