கனடாவில் குடிபெயர்வதற்கு எவ்வளவு பணம் தேவை? வெளியான புதிய அறிவிப்பு
கனடாவில் புலம்பெயர் விண்ணப்பதாரர்களின் நிதி ஆதாரம் தொடர்பில் அந்நாட்டின் குடியுரிமை அமைப்பானது (IRCC) புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வெளியான புதிய அறிவிப்பு
நிதி ஆதாரம் என்பது குடியேற்ற செயல்முறையின் ஒரு முக்கிய அங்கமாகும். கனடாவிற்கு (Canada) வந்தவுடன் தங்களையும் அவர்களுடன் வந்த குடும்ப உறுப்பினர்களையும் பொறுப்புடன் பார்த்துக்கொள்ள தேவையான நிதியை வைத்திருக்க வேண்டும். இதை கட்டாயம் அந்நாட்டின் குடியுரிமை அமைப்பானது (IRCC) உறுதிசெய்யும்.
சூப்பர் விசாவிற்குத் (Super Visa) தகுதிபெற, அவர்களுக்கு ஸ்பான்சர் செய்பவர் ஒரு கனேடிய குடிமகனாக, அல்லது, நிரந்தர குடியிருப்பு (Permanent Residents) அனுமதி பெற்றவராக கட்டாயம் இருக்க வேண்டும்.
அந்தவகையில் கனடாவில் குடிபெயர்வதற்கு நினைப்பவர்கள் வைத்திருக்க வேண்டிய பணத்தொகை குறித்து பார்க்கலாம்.
தேவையான பணம்
ஒரு விண்ணப்பதாரருக்கு தேவையான தொகை 14,690 கனேடிய டொலர்கள் (Canadaian Dollar) தேவை. (முன்பு 13,757 கனேடிய டொலர்கள்)
இரண்டு பேர் கொண்ட குடும்பத்திற்கு 18,288 கனேடிய டொலர்கள் தேவை. (முன்பு 17,127 கனேடிய டொலர்கள்)
மூன்று பேர் கொண்ட குடும்பத்திற்கு 22,483 கனேடிய டொலர்கள் தேவை. (முன்பு 21,055 கனேடிய டொலர்கள்)
நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு 27,297 கனேடிய டொலர்கள் தேவை. (முன்பு 25,564 கனேடிய டொலர்கள்)
ஐந்து பேர் கொண்ட குடும்பத்திற்கு இது 30,690 கனேடிய டொலர்கள் தேவை. (முன்பு 28,994 கனேடிய டொலர்கள்)
ஆறு பேர் கொண்ட குடும்பத்திற்கு 34,917 கனேடிய டொலர்கள் தேவை. (முன்பு 32,700 கனேடிய டொலர்கள்)
ஏழு பேர் கொண்ட குடும்பத்திற்கு 38,875 கனேடிய டொலர்கள் தேவை. (முன்பு 36,407 கனேடிய டொலர்கள்)
ஏழு உறுப்பினர்களுக்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு, ஒவ்வொரு கூடுதல் உறுப்பினருக்கும் 3,958 கனேடிய டொலர்கள் தேவை. (முன்பு 3,706 கனேடிய டொலர்கள்)
மேலும், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பால் (IRCC), ஏற்றுக்கொள்ளக்கூடிய நிதி ஆதாரம் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களால் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ கடிதங்கள் மூலம் ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் அமைய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |