ஒரு மணி நேரத்திற்கு ரூ.3 கோடி சம்பாதிக்கும் நபர் யார் தெரியுமா? அவரது சொத்து மதிப்பு
உலகின் மிகப் பெரிய பணக்காரரர் ஒருவர், ஒரு வினாடிக்கு எவ்வளவு சம்பாதிக்கிறார், ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு சம்பாதிக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
எவ்வளவு சம்பாதிக்கிறார்?
ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் படி, எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 198.9 பில்லியன் டொலராக உள்ளது. இதன் மூலம் அவர் ஒரு நொடி, ஒரு நிமிடம், ஒரு மணிநேரத்தில் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்று கணக்கிட்டால் வியப்பாக உள்ளது.
எலோன் மஸ்க்கின் சொத்துக்களின் நிகர மதிப்பு 229 பில்லியன் டொலரில் இருந்து 198.9 பில்லியனாகக் குறைந்திருந்தாலும், டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியின் கடந்த ஆண்டு மொத்த வருமானம் 3.6203 பில்லியன் டொலர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு ஆண்டிற்கு 365 நாட்கள் என்று கணக்கிட்டு பார்த்தால் 31,536,000 வினாடிகள் உள்ளன. அதை கணக்கிட்டு பார்க்கும் போது அவரது வருமானம், ஒரு வினாடிக்கு 114.80 டொலர் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.9500), ஒரு நிமிடத்திற்கு 6,887 டொலர் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.5.7 லட்சம்), ஒரு மணி நேரத்திற்கு 413,220 டொலர் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.3 கோடி), ஒரு நாளில் 9,917,280 டொலர் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.83 கோடி), ஒரு வாரத்திற்கு 69,420,960 டொலர் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.576 கோடி) ஆகும்.
வருமானத்தின் ஆதாரங்கள்
Twitter X தளம், SpaceX, Tesla, Starlink, The Boring Company, xAI மற்றும் Neuralink ஆகிய பிரபலமான தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு Elon Musk சொந்தக்காரர் ஆவார்.
Tesla கார் உற்பத்தி நிறுவனத்தின் Electric car தொடர்பான கண்டுபிடிப்புகள், SpaceX நிறுவனத்தின் விண்வெளி முயற்சிகளில் எலான் மஸ்க்கின் ஈடுபாடு தான் அவரின் வெற்றிக்கும், வருமானத்திற்கும் அடிப்படையாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |