Tax இல்லாமல் வங்கி கணக்கில் எவ்வளவு பணம் செலுத்த முடியும்?
சொந்த வங்கி கணக்கில் வரி இல்லாமல் எவ்வளவு பணம் செலுத்தலாம் என்பதை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
வருமான வரி
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்ய வேண்டும் என்பது வருமானவரி ஒழுங்குமுறைகளின் படி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிற கணக்குகள் போல சேமிப்பு கணக்கிலும் எவ்வளவு பணம் டெபாசிட் செய்ய வேண்டும் என்பதற்கான வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதாவது, நீங்கள் உங்களுடைய சேமிப்பு கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு அதிகமாக பணம் செலுத்தினால் வருமான வரி பிடிப்பதற்கு உள்ளாகிவிடுவீர்கள்.
வரி இல்லாமல் எவ்வளவு பணம் செலுத்தலாம்?
உங்களது சேமிப்பு கணக்கில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அதிகபட்ச பணத்தை செலுத்தும் போது வரி ஏய்ப்புக்கு ஆளாகாமல் இருக்க வரம்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை, பணப்புழக்கத்தை தடுக்க இந்த வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
நீங்கள் உங்களது சேமிப்பு கணக்கில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை பணம் செலுத்தலாம். எப்போதாவது ஒருமுறை என்றால் இந்த வரம்பு ரூ.2.5 லட்சம் வரை உயரும்.
Business today
மேலும், ஆண்டு வரம்பின்படி உங்களது சேமிப்பு கணக்கில் ரூ.10 லட்சம் வரை டெபாசிட் செய்தால், எந்தவொரு வரியையும் வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டியதில்லை. மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் வழிகாட்டுதல்களின் படி ரூ.10 லட்சம் மேல் டெபாசிட் செய்தல் உங்களது வங்கிகள் தகவல் தெரிவிக்க வேண்டும்.
அப்போது வரிவிதிப்பானது உங்களது சேமிப்பு கணக்கில் இருக்கும் தொகை மீது வராது, வங்கியிலிருந்து நீங்கள் பெறக்கூடிய வட்டியின் மீது இருக்கும்.
உங்களது வங்கி டெபாசிட்கள் மூலம் ரூ.10,000க்கு மேல் வட்டி வந்தால் வரிஏய்ப்பு வராது. அதாவது நீங்கள் உங்களது சேமிப்பு கணக்கில் ரூ.49999 பணம் டெபாசிட் செய்தால் பான் தேவையில்லை.
ரூ.50,000 அல்லது அதற்கு அதிகமானால் பான் கார்டு எண் வேண்டும். அப்போது, வருடாந்திர டெபாசிட் ரூ.10 லட்சத்திற்கும் தாண்டி சென்றால் வருமானவரித்துறைக்கு உங்களது வங்கிகள் தெரியப்படுத்தும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |