எந்தெந்த வங்கியில் எவ்வளவு மினிமம் பேலன்ஸ்(Minimum Balance) வைத்திருக்க வேண்டும்! முழு விவரம்
வங்கிகளில் உள்ள கனக்குகளில் எவ்வளவு குறைந்தபட்ச தொகை வைக்க வேண்டும் என்பதை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்கு
நீங்கள் வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தால் ஒரு குறிப்பிட்ட தொகையை மாதம்தோறும் வைத்திருக்க வேண்டும். இது, உங்களது வங்கிகள் கட்டணம் விதித்தால் பாதிக்காமல் இருக்கும். மேலும், இந்த தொகையானது நீங்கள் இருக்கும் ஊரை பொறுத்து மாறுபடும்.
ஆனால், தற்போது சில வங்கிகள் வாடிக்கையாளர்களை கவருவதற்காக வங்கி சேமிப்புக் கணக்கில் ஜீரோ பேலன்ஸ் வைத்திருந்தால் மட்டுமே போதுமானது என்று கூறுகின்றனர். அதனால், குறைந்தபட்ச தொகையும் நாம் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கான அபராதமும் விதிக்கப்படாது.
முக்கியமாக, மாதம் தோறும் பணத்தை எடுப்பதற்கு குறிப்பிட்ட முறை மட்டும் தான் நீங்கள் இலவசமாக பயன்படுத்த முடியும். அதையும் தாண்டி பணம் எடுத்தால் வங்கிகள் கட்டணத்தை வசூலிக்கும்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI)
கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் எஸ்பிஐ வங்கியில் தங்களுடைய சேமிப்பு கணக்கில் மாதம்தோறும் குறிப்பிட்ட தொகையை வைத்திருக்க வேண்டும் என்பதை நீக்கம் செய்துள்ளது.
அதற்கு முன்பு, கிராமப்புற வாடிக்கையாளர் என்றால் ரூ.1000-யும், நடுத்தர நகரங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் என்றால் ரூ. 2,000-யும், நகர்ப்புற மற்றும் மெட்ரோ நகர வாடிக்கையாளர்கள் என்றால் ரூ,5,000-யும் தங்களுடைய சேமிப்பு கணக்கில் ஒவ்வொரு மாதமும் வைத்திருக்க வேண்டும்.
ஹெச்டிஎஃப்சி வங்கி (HDFC)
ஹெச்டிஎஃப்சி வங்கியில் கிராமப்புற வாடிக்கையாளர்கள் என்றால் காலாண்டுக்கு ஒருமுறை ரூ. 2,500-யும், ஒரு வருட காலத்திற்கு குறையாத பிக்சட் டெபாசிட்டில் 25,000-யும் தங்களுடைய கணக்கில் பராமரிக்க வேண்டும்.
அதே, நடுத்தர நகரங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் என்றால் காலாண்டுக்கு ஒருமுறை ரூ. 5000-யும், ஒரு வருட காலத்திற்கு குறையாத பிக்சட் டெபாசிட்டில் 50,000-யும் தங்களுடைய கணக்கில் பராமரிக்க வேண்டும்.
நகர்ப்புற மற்றும் மெட்ரோ நகர வாடிக்கையாளர்கள் என்றால் காலாண்டுக்கு ஒருமுறை ரூ. 10,000-யும், ஒரு வருட காலத்திற்கு குறையாத பிக்சட் டெபாசிட்டில் 1,00,000-யும் தங்களுடைய கணக்கில் பராமரிக்க வேண்டும்.
கனரா வங்கி (Canara Bank)
கனரா வங்கியில் கிராமப்புற வாடிக்கையாளர் என்றால் ரூ.500-யும், நடுத்தர நகரங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் என்றால் ரூ.1,000-யும், நகர்ப்புற மற்றும் மெட்ரோ நகர வாடிக்கையாளர்கள் என்றால் ரூ. 2,000-யும் தங்களுடைய சேமிப்பு கணக்கில் ஒவ்வொரு மாதமும் வைத்திருக்க வேண்டும்.
ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank)
ஐசிஐசிஐ வங்கியில் கிராமப்புற வாடிக்கையாளர் என்றால் ரூ.2,000-யும், நடுத்தர நகரங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் என்றால் ரூ.5,000-யும், நகர்ப்புற மற்றும் மெட்ரோ நகர வாடிக்கையாளர்கள் என்றால் ரூ. 10,000-யும் தங்களுடைய சேமிப்பு கணக்கில் ஒவ்வொரு மாதமும் வைத்திருக்க வேண்டும்.
பஞ்சாப் நேஷனல் வங்கி (punjab national bank)
பஞ்சாப் நேஷனல் வங்கியில் கிராமப்புற வாடிக்கையாளர் என்றால் ரூ.1,000-யும், நடுத்தர நகரங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் என்றால் ரூ.5,000-யும், நகர்ப்புற மற்றும் மெட்ரோ நகர வாடிக்கையாளர்கள் என்றால் ரூ. 10,000-யும் தங்களுடைய சேமிப்பு கணக்கில் ஒவ்வொரு மாதமும் வைத்திருக்க வேண்டும்.
மேலும், இந்த வங்கியில் குறிப்பிட்ட தொகையை பராமரிக்க தவறும் கிராமப்புற மற்றும் நடுத்தர நகரத்தை சேர்ந்த மக்களுக்கு ரூ.400 அபராதமும், நகர்ப்புற மற்றும் மெட்ரோ நகர வாடிக்கையாளர்களுக்கு ரூ.600 அபராதமாக வசூலிக்கப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |