யூடியூப் வருமானம்; 1 கோடி பார்வைக்கு எவ்வளவு பணம் கிடைக்கும்?
யூடியூப்பில் ஒரு கோடி பார்வைகளுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
யூடியூப் வருமானம்
யூடியூப் வீடியோ பார்க்கும் தளமாக மட்டும் இல்லாமல், பெரும் வருமானம் ஈட்டும் தளமாக உள்ளது.

39 கோடி சந்தாதரர்களுடன் உலகளவில் அதிக பேர் பின்தொடரும் யூடியூப் சேனலாக உள்ள மிஸ்டர் பீஸ்ட், மாதத்திற்கு 50 மில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.425 கோடி) வருமானம் ஈட்டி வருகிறது.
இதே போல், உலகம் முழுவதும் பல லட்சம் பேர் யூடியூப் மூலம் வருமானம் பெற்று வருகின்றனர்.
கடந்த 4 ஆண்டுகளில், 100 பில்லியன் டொலர்களை கலைஞர்கள் ஊடக நிறுவனங்கள் மற்றும் படைப்பாளிகளுக்கு வழங்கியுள்ளதாக யூடியூப் தெரிவித்துள்ளது.
இதில், வருமானம் ஈட்டுவதற்கு குறைந்தபட்சம் 1000 சந்தாதாரர்கள் இருக்க வேண்டும், கடந்த 12 மாதங்களில் உங்கள் வீடியோக்கள் மொத்தமாக 4,000 பார்வைகளை பெற்றிருக்க வேண்டும்.
ஆனால் இதில், பலருக்கும் எவ்வளவு பார்வைகள் பெற்றால் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பது தெரியாது.

முதலில் யூடியூப் எப்படி உங்களுக்கு பணம் வழங்குகிறது என பார்க்கலாம்.
உங்கள் வீடியோவின் தொடக்கம் அல்லது இடையில் யூடியூப் விளம்பரங்களை ஒளிபரப்பும். அதற்கு விளம்பரதாரர்கள் யூடியூப் நிறுவனத்திற்கு பணம் வழங்குவார்கள். CPM என்பதை அளவீடாக வைத்து யூடியூப் விளம்பரதாரர்களிடம் பணம் வசூலிக்கும்.
CPM என்பது Cost Per Mille, அதாவது 1,000 பார்வைகளுக்கு விளம்பரதாரர் எவ்வளவு செலுத்துகிறார் என்பதைக் குறிக்கும்.
1 கோடி பார்வைக்கு எவ்வளவு பணம்?
இதே போல் படைப்பாளர்கள் பணம் பெறுவது RPM எனப்படும். RPM என்பது Revenue Per Mille, அதாவது 1,000 பார்வைகளுக்கு படைப்பாளர் எவ்வளவு வருமானம் பெறுகிறார் என்பதைக் குறிக்கும்.
அனைவருக்கும் RPM ஒரே அளவில் இருப்பதில்லை. சிலருக்கு ஒரே பார்வைகள் இருந்தாலும் பணம் அதிகமாக அல்லது குறைவாக கிடைக்கும்.

Credit : Getty Images/i Stock
வீடியோவின் நீளம், பார்வையாளர்கள் வசிக்கும் நாடு, விளம்பரங்களின் எண்ணிக்கை மற்றும் ஈடுபாடு ஆகியவை முக்கிய பங்கு வகிக்கும்.
உதாரணமாக, ஒரு வீடியோ ஒரு கோடி பார்வைகளை பெற்றால், அதன் மூலம் ரூ.2.50 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை கிடைக்கும். இது Youtube Adsense என அழைக்கப்படுகிறது.
யூடியூபர்கள் Adsense மூலம் கிடைக்கும் வருமானத்தை மட்டும் நம்பி இருப்பதில்லை. பிராண்ட்கள் உடனான ஒப்பந்தம், ஸ்பான்சர்ஷிப்கள், Affiliate Marketing இது போன்ற பல வழிகளில் வருமானம் ஈட்டி வருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |