ஒரு கிராம் தங்கவிலை 6 வருடம் கழித்து எவ்வளவு இருக்கும்? நிபுணர்களின் அதிர்ச்சி கணிப்பு
உலகிலேயே யாரிடம் அதிகளவில் தங்கம் இருக்கிறதோ அவர்கள் பணக்காரர்களாக அறிப்படுகிறார்கள்.
ஒவ்வொரு நாளும் தங்கத்தின் பெறுமதியானது அதிகரித்தும் செல்லும் குறைந்தும் செல்லும். அந்தவகையில் 2030 ஆம் ஆண்டில் ஒரு கிராம் தங்கத்தின் விலை எவ்வளவு இருக்கும் என இந்த பதிவில் விரிவாக தெரிந்துக்கொள்வோம்.
6 வருடங்களில் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு?
2024 ஆம் ஆண்டின் காலாண்டில் தங்கம் விலை சுமார் 13% உயர்ந்துள்ளது.
இந்த காலமே நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்வதற்கு ஏற்ற காலமாகும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றன.
2030 ஆம் ஆண்டுக்குள் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1.68 லட்சத்தை எட்டும் என நிபுணர்கள் கூறுகின்றன.
அவ்வாறு நிகழ்ந்தால் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.16,800 ஆக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இந்த பிரச்சினைக்கு உலகத்தில் நடக்கும் பிரச்சினைகளும் ஓர் காரணமாக இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றார்கள். அதாவது உலகப் பொருளாதார பிரச்சினைகள், பண வீக்கம், தங்கத்தின் தேவை அதிகரிப்பு, தங்கச் சுரங்க உற்பத்தியில் தேக்கம் என பல வகையான காரணங்கள் இருக்கின்றன.
தங்கத்தின் விலை குறையும் என்று எதிர்பார்க்க வேண்டாம். நீங்கள் இந்த நேரத்தில் தங்கத்தில் முதலீடு செய்வதே நல்லது. அதிலும் தங்க ஆபரணத்தை விட பத்திரத் திட்டத்தில் முதலீடு செய்வது சிறந்த தேர்வாக இருக்கும் என கூறுகின்றார்கள்.
ஆண்டுக்கு பலமுறை மத்திய அரசு SGB எனப்படும் தங்கப் பத்திரங்களை ஏலம் விடும். அந்த நேரத்தில் நீங்கள் முதலீட்டை ஆரம்பிக்கலாம்.
இதில் முதலீடு செய்யும் நீங்கள் ஒரு தனிநபராக இருந்தால் 4 கிலோ வரை முதலீடு செய்யலாம். அறக்கட்டளைக்கு வாங்க நினைத்தால் 20 கிலோகிராம்கள் வரை வாங்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |