கௌதம் அதானியின் ஆண்டு சம்பளம் எவ்வளவு தெரியுமா?
கடந்த நிதியாண்டில் கௌதம் அதானி எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்பதை இங்கே பார்க்கலாம்.
அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி 2023-24 நிதியாண்டில் மொத்தம் ரூ.9.26 கோடி சம்பளம் பெற்றுள்ளார்.
அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் (AEL) 2023-24 நிதியாண்டில் அதானிக்கு சம்பளமாக ரூ.2.19 கோடியும், இதர அலவன்ஸாக ரூ.27 லட்சமும் வழங்கியுள்ளது.
AEL நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையின்படி, கௌதம் அதானியின் மொத்த சம்பளமான ரூ.2.46 கோடியானது, அவரது முந்தைய நிதியாண்டின் (2022-23) சம்பளத்தை விட 3 சதவீதம் அதிகம் என தெரிவித்துள்ளது.
இது தவிர, 2023-24 நிதியாண்டில் Adani Ports மற்றும் SEZ லிமிடெட் நிறுவனத்திடமிருந்து கௌதம் அதானி ரூ.6.8 கோடி சம்பளம் பெற்றுள்ளார்.
Bloomberg Billionaires Index-ன்படி, உலக பணக்காரர்கள் பட்டியலில் கௌதம் அதானி 14வது இடத்தில் உள்ளார். ஜூன் 23-ஆம் திகதி நிலவரப்படி அவரது தனிப்பட்ட சொத்து மதிப்பு 106 பில்லியன் அமெரிக்க டொலர் ஆகும்.
கௌதம் அதானிக்கு மேல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் உரிமையாளரான முகேஷ் அம்பானி (Mukesh Ambani) உலக பணக்காரர்கள் பட்டியலில் 12வது இடத்தில் உள்ளார். அம்பானியின் சொத்து மதிப்பு 111 பில்லியன் அமெரிக்க டொலர் ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Billionaire Gautam Adani's salary, Gautam Adani Annual salary, Adani Group, Gautam Adani net worth