ரஷ்யப்படைகளுக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை... எனக்கு அது வேண்டும்: அடம் பிடிக்கும் புடின்
ரஷ்யா எக்கச்சக்க இழப்புகளை சந்தித்தாயிற்று, ஆனால், இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை, எப்படியாவது கிழக்கு உக்ரைன் பகுதியை கைப்பற்றியே தீருவது என அடம் பிடித்து வருகிறார் புடின்.
இந்நிலையில், 30,000க்கும் அதிகமான படைவீரர்களை இழந்துவிட்டதால் உக்ரைனில் ரஷ்ய இராணுவம் நிலைகுலையும் நிலை ஏற்பட்டுள்ளது என பிரித்தானியாவின் இரகசிய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நேற்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை, அது வெற்றிக்காக ரஷ்யா கொடுக்கும் விலை என்று கூறும் புடின், இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை, எப்படியாவது கிழக்கு உக்ரைன் பகுதியை கைப்பற்றியே தீருவது என உறுதியாக நிற்கிறார்.
ஆனால், உக்ரைன் ஊடுருவல் தொடர்பான புதிய இரகசிய அறிக்கை ஒன்று, ரஷ்யப்படைவீரர்களைப் பொருத்தவரை இது மிகப்பெரிய இழப்பாக இருக்கும் என தெரிவிக்கிறது.
சமீபத்திய நிலவரங்களின்படி, பிப்ரவரி 24ஆம் திகதி உக்ரைனை ரஷ்யா ஊடுருவியபோது 100,000க்கும் அதிகமான படைவீரர்கள் ரஷ்யப்படையில் இருந்த நிலையில், அவர்களில் 30,350பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
அதுபோக, ரஷ்யாவுக்கு சொந்தமான பல்லாயிரக்கணக்கான இராணுவ வாகனங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.