உலகின் மிகப்பெரிய பாம்பின் எடை எவ்வளவு தெரியுமா?
உலகின் மிகப்பெரிய பாம்பான வாசுகி இண்டிகஸின் எடை எவ்வளவு என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
எடை எவ்வளவு?
அண்மையில் ஒரு பெரிய பாம்பின் புதை வடிவத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதற்கு வாசுகி என்றும் பெயரிட்டுள்ளனர்.
அறிவியல் ரீதியாக பார்த்தால் இந்த பாம்பானது இந்தியாவில் காணப்படும் அழிந்துபோன ஒரு வகை பாம்பின் இனமாகக் கருதப்படுகிறது. மேலும், இது உலகத்தின் மிக நீளமான பாம்பாகவும் கூறப்படுகிறது.

சாட்டை துரைமுருகன் யூடியூப் சேனலுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை: சீமான் அறிவிப்பு
இந்த பாம்பிலிருந்து 27 முதுகெலும்புகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதில் சில முதுகெலும்புகள், அவை உயிரோடு இருந்த நிலையில் இருப்பதாக சொல்கின்றனர்.
இதில் வாசுகி இண்டிகஸ் என்ற பெயரின் இண்டிகஸ் என்பது இந்தியாவை குறிக்கும் சொல் ஆகும். இது, நவீன காலத்தில் இருக்கும் பெரிய மலைப்பாம்பு போல இருந்திருக்கும்.
அதேபோல இது விஷத்தன்மை கொண்டதாக இருந்திருக்காது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள பனந்த்ரோ பகுதியில் இருக்கும் சுரங்கத்தில் பாம்பின் புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்டது.
உலகளாவிய வெப்பநிலை அதிகமாக இருந்த காலத்தில் இந்த பாம்புகள் கடற்கரைக்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் இந்தப் பாம்பு வாழ்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த பாம்பின் நீளம் 36-49 அடி (11-15 மீட்டர்) மற்றும் ஒரு மெட்ரிக் டன் (1,000 கிலோ) அளவிற்கு எடை இருக்கும் என்று தோராயமாக மதிப்பிட்டுள்னனர். இந்த பாம்புகள் டைனோசர்களின் சகாப்தம் முடிந்த பிறகு தொடங்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |