2021 புத்தாண்டு பலன்கள்: கன்னி ராசிக்காரர்களே! திடீர் அதிர்ஷ்டங்களும், யோகங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையப்போகுதாம்

Astrology Vigro Horoscope
By Balakumar Dec 25, 2020 12:17 PM GMT
Report

கன்னி ராசிக்காரர்களுக்கு வரவிருக்கும் 2021ஆம் ஆண்டு எப்படி இருக்கும் இருக்கப்போகின்றது என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

உங்களுடைய ராசிக்கு ஆண்டின் தொடக்கத்தில் செவ்வாய் பகவான் எட்டாம் வீட்டில் அமர்ந்திருப்பது சில பிரச்சனைகளை ஏற்படுத்தும். சனி பகவான் ஐந்தாம் வீட்டில் இருப்பார்.

ராகு, கேது முறையே 9 மற்றும் 3-வது வீட்டில் அமர்ந்து இருப்பார்கள். குரு பகவான் ஐந்திலிருந்து பின்னர் பெயர்ச்சியாகி 6 மற்றும் 7வது இடத்தில் இந்த வருடம் இருப்பார்கள்.

இந்த கிரக அமைப்பின்படி திடீர் அதிர்ஷ்டங்களும், எதிர்பாராத தோல்விகளையும் சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.

குடும்பம் - குடும்பத்தைப் பொறுத்தவரை கன்னி ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசியிலிருந்து 5-ஆம் வீட்டில் சனிபகவான் அமர்ந்திருப்பதால் குடும்பத்தை விட்டு தள்ளி இருக்கும் சூழ்நிலை ஏற்படலாம். இதனால் குடும்பத்தின் மீது இருக்கும் பற்றும் குறைவதற்கு வாய்ப்புகள் உண்டு.

அவர்களுக்கென தனியாக நேரம் செலவிட்டால் வர இருக்கும் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். கணவன் மனைவிக்கு இடையே நல்ல புரிதலை உண்டாக்க முயற்சி செய்ய வேண்டும்.

ஈகோ, போட்டி, பொறாமை எல்லாம் வீட்டிற்கு வெளியே தான், உள்ளே அல்ல என்பதை உணர வேண்டும். செப்டம்பர் மாதத்திற்கு பிறகு குடும்பத்தில் சுபகாரிய விஷயங்களெல்லாம் நடைபெறும் யோகம் உண்டு. மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.

வியாபாரம் மற்றும் தொழில் - தொழில் மற்றும் வியாபாரத்தை பொறுத்தவரை கன்னி ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் உண்டாகும். சிறந்த முடிவுகளை எடுப்பதற்கான முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.

நீங்கள் வெவ்வேறு துறைகளில் இருக்கும் நபர்களுடன் தொடர்பு கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்களும் அமையும்.

அவர்கள் மூலம் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். உங்களிடம் பணிபுரிபவர்களிடம் இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து நல்ல அபிப்ராயம் உண்டாகும். தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது மூலம் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.

பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் பெரிய தொகையை ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்களில் ஒருசிலருக்கு கையெழுத்தாக கூடிய யோகம் உண்டாகும்.

உத்தியோகம் - உத்தியோகத்தை பொறுத்தவரை கன்னி ராசிக்காரர்கள் ஆண்டின் தொடக்கத்தில் நல்ல பலன்களை பெறுவீர்கள்.

பின்னர் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு சிறுசிறு சண்டை சச்சரவுகளும், தேவையற்ற பிரச்சினைகளும், அதனால் வரும் மன உளைச்சலும் பாதிப்புகளை உண்டாக்கும். வார்த்தைகளை விடுவதற்கு முன் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம்.

உங்களுடைய நல்ல குணத்தை கூட திரித்து தவறானவர்களாக காட்டி விடக்கூடிய அபாயம் உண்டாகும் என்பதால் அதிக அளவு பொறுமையுடன் செயல்படுவது மிகவும் நல்லது.

செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு உங்களுடைய புதிய புதிய முயற்சிகளுக்கு வரவேற்புகள் ஏற்படும்.

பொருளாதாரம் - கன்னி ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை சமாளிப்பதற்கு நல்ல திறமை உண்டு.

ஆண்டின் தொடக்கத்தில் பண ரீதியான விஷயத்தில் பெரும் சிக்கல்களை சந்தித்தாலும், ஏப்ரல் மாதத்திற்கு பிறகு ஓரளவுக்கு சிறப்பாகவே அமைய இருக்கிறது.

திடீர் அதிர்ஷ்டங்களும், யோகங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையலாம். வரும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டால் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும்.

பெண்களுக்கு - பெண்களைப் பொறுத்தவரை கன்னி ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் உண்டாகும்.

இதுவரை உங்கள் மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் அன்னோன்யம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள்.

நீண்ட நாள் தடைபட்டு இருந்த சுபச்செய்தி ஒன்று கிடைக்கும் யோகமும் உண்டு. தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

பரிகாரம் - கன்னி ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமை தோறும் துர்க்கை அம்மனை வணங்கி வருவது சிறப்பான பலன்களை கொடுக்கும்.

மேலும் உங்களால் முடிந்த ஏழை முதியவர்களுக்கு சிவப்பு நிறத்தில் வஸ்திர தானம் செய்யுங்கள். எதிர்பார்த்தவை கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். -

Dhevigam

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US