EPF சேவைகளுக்கு உங்கள் UAN எண்ணை எப்படி பயன்படுத்தலாம்?
By Kirthiga
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அனைத்து உறுப்பினர்களுக்கும் அடையாளத்திற்காக தனித்துவமான கணக்கு எண்ணை (UAN) வழங்குகிறது.
அவர்கள் தங்கள் முதலாளிகளை மாற்றினாலும், வேலையை மாற்றினாலும் அவர்களின் சேவைக் காலம் முழுவதும் UAN எண் மாறாமல் இருக்கும்.
இந்த கணக்கை நீங்கள் முதலில் ஆரம்பித்துக்கொள்ள வேண்டும். அதாவது இணையத்திலேயே வீட்டில் இருந்தப்படியே செய்யலாம்.
அது எப்படி இலகுவாக செய்யலாம் என பார்க்கலாம்.
UAN எண்ணை எவ்வாறு செயல்படுத்துவது?
-
முதலில் www.epfindia.gov.in. என்ற இணையத்தளத்திற்குள் நுழைய வேண்டும்.
- பின் ‘Our Services’ என்ற இடத்திற்குள் சென்று ‘For Employees’ Click செய்யவும்.
- ‘Member UAN/ Online Services’ என்ற சேவையில் ‘Activate Your UAN’ என்று இருப்பதற்குள் செல்ல வேண்டும்.
- அடுத்து UAN எண், பெயர், பிறந்த திகதி, தொலைபேசி இலக்கம் என்பவற்றை பதிவிடவும்.
- பின் ‘Get Authorization Pin’ என்பதை கிளிக் செய்தால் உங்களுடைய தொலைப்பேசிக்கு ஒரு எண் வரும்.
- இறுதியாக ‘Validate OTP and Activate UAN’ என்பதை கிளிக் செய்து, அதில் தொலைபேசிக்கு வந்த எண்ணை உள்ளிட வேண்டும்.
UAN ஐ செயல்படுத்துவது ஏன் முக்கியம்?
இது உங்களுக்கு பல்வேறு வழிகளில் உதவுகிறது. நீங்கள் வேலை மாறும்போது உங்கள் EPF கணக்குகளைக் கண்காணிக்க இது உதவுகிறது எனலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US