ப்ளூ ஆதார் அட்டை ஏன் தேவை? முக்கியத்துவம், விண்ணப்பிக்கும் எளிதான வழி!
இந்தியாவில் ப்ளூ ஆதார் அட்டை (Blue Aadhaar Card) என்பது 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஒரு தனித்துவமான அடையாள அட்டை. இது UIDAI (Unique Identification Authority of India) ஆல் வழங்கப்படுகிறது.
ப்ளூ ஆதார் அட்டை (Blue Aadhaar Card)
இந்தியாவில் ஆதார் அட்டை என்பது மிகவும் முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது, ஏனென்றால் இந்த ஆதார் அட்டை ஆவணம் இருந்தால் தான் அரசின் பல நலத்திட்டங்களின் பலன்களை பெற முடியும்.
இந்நிலையில் இந்தியாவில் ப்ளூ ஆதார் அட்டை (Blue Aadhaar Card) என்ற வார்த்தை தொடர்ந்து ஒலித்துக் கொண்டு உள்ளது, உடனே அய்யோ..! நம்மிடம் அந்த ப்ளூ ஆதார் அட்டை (Blue Aadhaar Card) நம்மிடம் இல்லையே என்று பதற வேண்டாம்.
ப்ளூ ஆதார் அட்டை (Blue Aadhaar Card) என்பது 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஒரு தனித்துவமான அடையாள அட்டை. இது UIDAI (Unique Identification Authority of India) ஆல் வழங்கப்படுகிறது.
ரூ.451 கோடி விலையுயர்ந்த நெக்லஸ்! மருமகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கு அம்பானி வழங்கிய பரிசு என்ன தெரியுமா?
பொதுவாக ஆதார் அட்டைகள் கைரேகை, கண் கருவிழி ஆகியவற்றை ஸ்கேன் செய்து வழங்கப்படுகிறது, ஆனால் இந்த நீல நிற ஆதார் அட்டையானது அப்படி இல்லை. இவை குழந்தைகளுக்கான ஆவணம் என்பதால், இதில் குழந்தையின் பயோமெட்ரிக் தரவுகள் (கைரேகைகள் மற்றும் கருவிழி ஸ்கேன்) பதிவு செய்யப்படாது. இந்த நீல ஆதார் அட்டையில் குழந்தையின் புகைப்படத்துடன் பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயர், விலாசம், பிறந்த திகதி ஆகியவை மட்டுமே UID எண்(Unique Identification Number) உடன் சேர்த்து வழங்கப்படும்.
ப்ளூ ஆதார் அட்டை ஏன் முக்கியம்?
குழந்தைகளின் பாதுகாப்பு: ப்ளூ ஆதார் அட்டை, குழந்தைகளின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதன் மூலம், கடத்தல் மற்றும் வேறு எந்த வகையான துஷ்பிரயோகத்திலிருந்தும் அவர்களை பாதுகாக்க உதவுகிறது.
அரசு நலத்திட்டங்கள்: ப்ளூ ஆதார் அட்டை, குழந்தைகளுக்கு அரசாங்கத்தின் பல்வேறு நலத்திட்டங்களை பெற உதவுகிறது.
கல்வி: பள்ளிகளில் சேர்ப்பதற்கு ப்ளூ ஆதார் அட்டை ஒரு முக்கிய ஆவணமாகும்.
தடுப்பூசிகள்: ப்ளூ ஆதார் அட்டை, குழந்தைகளின் தடுப்பூசி திட்டத்தை கண்காணிக்க உதவுகிறது.
பயணம்: விமானம் மற்றும் ரயில் போன்ற பொது போக்குவரத்து வழிமுறைகளில் பயணம் செய்யும் போது குழந்தைகளின் அடையாளத்தை உறுதிப்படுத்த ப்ளூ ஆதார் அட்டை பயன்படுகிறது.
ப்ளூ ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி?
தேவையான ஆவணங்கள்
- குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்
- பெற்றோர்களில் ஒருவரின் ஆதார் அட்டை
- முகவரிச் சான்று (ரேஷன் அட்டை, மின்சார கட்டண ரசீது போன்றவை)
- குழந்தையின் புகைப்படம்
விண்ணப்பிக்கும் முறை
- அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்திற்கு செல்லவும்.
- ப்ளூ ஆதார் அட்டைக்கான விண்ணப்பப் படிவத்தைப் (Blue Aadhaar card application)பெற்று நிரப்பவும்.
- தேவையான ஆவணங்களை இணைக்கவும்.
- விண்ணப்பக் கட்டணம் (இருந்தால்) செலுத்தவும்.
- படிவத்தை சமர்ப்பிக்கவும்.
விண்ணப்ப நிலையை சரிபார்க்கவும்
- UIDAI இணையதளத்தில் உங்கள் விண்ணப்ப நிலையை சரிபார்க்கலாம்.
- விண்ணப்பம் பதிவு செய்யப்பட்ட 60 நாட்களுக்குள் ப்ளூ ஆதார் அட்டை வழங்கப்படும்.
ப்ளூ ஆதார் அட்டை பற்றிய கூடுதல் தகவல்களுக்கு
- UIDAI இணையதளத்தை பார்வையிடவும்: https://uidai.gov.in/
- UIDAI ஹெல்ப்லைன் எண்ணை அழைக்கவும்: 1947
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
blue aadhaar card india, importance of blue aadhaar card, benefits of blue aadhaar card, eligibility for blue aadhaar card, how to apply for blue aadhaar card, documents required for blue aadhaar card, blue aadhaar card application process, blue aadhaar card website, uidai blue aadhaar card