7 நாட்களில் கட்டுகடங்காத முடி வளர்ச்சியை பெற ஒரு கைபிடி வாழை இலை போதும் - எப்படி தெரியுமா?
பொதுவாகவே அனைவருக்கும் தங்களது முடியை அழகாகவும் நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
ஆனால் குறிப்பிட்ட ஒரு சில குறைப்பாட்டால் அதை பராமரிக்க முடிவதில்லை. அந்தவகையில் அனைவரது வீட்டிலும் எப்போதும் கிடைக்கும் வாழை இலை வைத்து எப்படி முடியை நீளமாக வளர்க்கலாம் என்று பார்க்கலாம்.
வாழை இலையில் நன்மைகள்
வாழை இலை ஒரு சிறந்த கிருமி நாசினி. இது உணவில் உள்ள நச்சு தன்மையை நீக்குவதோடு உடலுக்கும் நன்மையை வழங்குகிறது.
வாழை இலையில் சூடான சாத்தை வைத்து சாப்பிட்டால் முதுமை தலைநிறைத்தல் தள்ளாமை போன்றவை ஏற்படாமல் தடுக்க முடியும். அவ்வாறே வாழை இலையின் சாறும் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
எப்படி பயன்படுத்துவது?
முதலில் வாழை இலையை நன்றாக கழுவி அதை அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் வடிக்கட்டி வேறு ஒரு பாத்திரத்தில் அதன் சாற்றை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
அடுத்ததாக எடுத்து வைத்துள்ள வாழை இலையின் சாற்றை உங்களது தலை முடியில் தடவி, அப்படியே ஊற விடவும்.
இறுதியாக குளிர்ந்த நீரில் முடியை கழுவ வேண்டும். இவ்வாறு ஒரு வாரத்திற்கு ஒரு முறை செய்தால் போதும் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
மேலும் தலையில் அரிப்பு, சூடு கட்டிகள், எரிச்சல் போன்றவை இருந்தாலும் அதை வாழை இலை சாற்று குணப்படுத்தி விடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |