இந்தியாவில் உள்ள பணக்கார மாநிலங்கள் எவை தெரியுமா?
இந்தியாவில் மொத்தமாக 28 மாநிலங்கள் உள்ளன. உலகின் ஏழாவது பெரிய நாடாகவும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட பட்டியலில் இரண்டாவது இடத்தில் காணப்படுகிறது.
இது ஒரு பாராளுமன்ற வடிவ அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இந்தியாவின் சில மாநிலங்கள் உள்நாட்டு உற்பத்தியில் முன்னணியில் இருக்கிறது. இது நாட்டின் பொருளாதாரத்தையும் வலுப்படுத்திக் கொண்டு செல்கிறது.
குறிப்பிட்ட 7 மாநிலத்தை உள்ள பொருளாதார வளர்ச்சி மட்டுமே இந்தியாவை பொருளாதார ரீதியில் வலிமையான பாதைக்கு கொண்டு செல்கின்றது.
அந்தவகையில் இந்தியாவில் உள்ள பணக்கார மாநிலங்கள் எவை என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்தியாவின் பணக்கார மாநிலங்கள்
இந்தியாவின் பணக்கார மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இதன் தலைநகராக மும்பை இருக்கிறது. இது 31 டிரில்லியனுக்கும் அதிகமான GSDP (Gross State Domestic Product) - ஐ கொண்டுள்ளது.
மும்பை பங்குச் சந்தை, இந்திய ரிசர்வ் வங்கி, தேசிய பங்குச் சந்தை மற்றும் டாடா, கோத்ரெஜ், ரிலையன்ஸ் போன்ற முக்கிய நிறுவனங்களின் தலைமையகம் மும்பையில் அமைந்துள்ளது. மகாராஷ்டிராவின் கலச்சாரமும் உலக புகழ்பெற்றவை.
மகாராஷ்டிராவிற்கு அடுத்து தமிழ்நாடு இருக்கிறது. தனக்கென ஒரு தனி இடத்தை உற்பத்து துறையில் தமிழ்நாடு பிடித்துள்ளது எனலாம். இது 20 டிரில்லியனுக்கும் அதிகமான GSDP-யை கொண்டுள்ளது. குறிப்பாக ஆடைக்காக தமிழ்நாடு நன்கு அறியப்படுகிறது.
அடுத்தப்படியாக வாகன தொழிலும் இருக்கிறது. தகவல் தொழில்நுட்பத்தில் மாபெரும் முன்னேற்றத்தை கண்டுள்ள தமிழ்நாடு, உலகம் முழுவதும் முதலீடு செய்துள்ளது.
தமிழ்நாட்டுக்கு அடுத்தபடியாக குஜராத் உள்ளது. இந்த மாநிலம் சுமார் 20 டிரில்லியன் GSDP-யை கொண்டுள்ளது. இங்கு சர்வதேச அளவில் பெட்ரோ கெமிக்கல் மற்றும் மருந்துத் துறைகளில் முக்கிய பங்கை வகிக்கிறது.
தொழில் துறைகள், உற்பத்தி, ஏற்றுமதி, முதலீடுகள் ஆகியவை குஜராத் மாநிலத்தை முன்னெடுத்திக் கொண்டு செல்கிறது. சர்தார் சரோவர் அணை விவசாயத் துறையையும் மேம்படுத்துகிறது, இது மாநிலத்தின் உணவு பாதுகாப்பு மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தின் அடிப்படையாகும்.
விவசாய உற்பத்தியில் உத்தரபிரதேசம் முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஓர் நாட்டின் உணவு பாதுகாப்பை வழங்கும் மாநிலமாக கருதப்படுகிறது.
சுமார் 19.7 டிரில்லியன் GSDP-யை கொண்டுள்ளது. . கோதுமை, அரிசி, கரும்பு, உருளைக்கிழங்கு போன்ற பல பயிர்களுக்கு உத்தரபிரதேசம் மிகவும் முக்கியமானது.
அடுத்தபடியாக சிலிக்கான் நகரம் என அழைப்படும் பெங்களூர் காணப்படுகிறது. பெங்களூரில் உள்ள IT நிறுவங்கள் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
பெங்களூரில் உள்ள IT நிறுவனங்கள் மற்றும் start-up நிறுவனங்கள் அதிகரித்துள்ளமை பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்கிறது.
அடுத்தபடியாக மேற்கு வங்கம் உள்ளது. இந்த மாநிலத்தின் பொருளாதாரம் 13 டிரில்லியனுக்கும் அதிகமான GSDP கொண்டுள்ளது. இங்கு கலாச்சார பாரம்பரியம் மற்றும் வணிகங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இறுதியாக ஆந்திர பிரதேசம் உள்ளது. இது 11.3 டிரில்லியன் GSDP-யை கொண்டுள்ளது.
இந்த மாநிலமானது பல்வேறு துறையில் வளர்ச்சி கொண்டுள்ளது. இங்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் bio technology இற்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |