PF balance-யை ஒரே கிளிக்கில் தெரிந்து கொள்ள வேண்டுமா? இது மட்டும் செய்தால் போதும்
PF balance மற்றும் பிற தகவல்களை எளிதாகப் பார்க்க ‘Passbook Lite’-யை EPFO அறிமுகப்படுத்துகிறது.
EPFO Passbook Lite
EPFO கணக்கு இருந்தும், உங்கள் PF பங்களிப்புகள் குறித்த செய்திகள் வரவில்லை என்றால் இந்த பதிவு உங்களுக்கானது.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) நாடு முழுவதும் உள்ள அதன் மில்லியன் கணக்கான உறுப்பினர்களுக்காக ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த அம்சத்தைப் பயன்படுத்தி, பயனர்கள் தங்கள் அனைத்து EPFO பாஸ்புக் விவரங்களையும் ஒரே கிளிக்கில் அணுகலாம்.
EPFO அறிமுகப்படுத்தும் Passbook Lite என்ற புதிய அம்சம் மூலம் பயனர்கள் தங்கள் EPF balance-யை ஒரே கிளிக்கில் பார்க்கலாம்.
முன்பு, PF கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் UAN, கடவுச்சொல் மற்றும் கேப்ட்சாவை உள்ளிட வேண்டிய நிலையில் தற்போது UAN எண் மற்றும் OTP ஐ மட்டுமே உள்ளிட வேண்டும். அதன் பிறகு, நேரடியாக பாஸ்புக்கை அணுகலாம்.
எவ்வாறு பயன்படுத்துவது?
முதலில், www.epfindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ EPFO வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
பின்னர், ‘பாஸ்புக் லைட்’ பிரிவில் கிளிக் செய்யவும்.
உங்கள் UAN எண்ணை உள்ளிடவும்.
உங்கள் மொபைல் தொலைபேசிக்கு ஒரு OTP அனுப்பப்படும்.
OTP ஐ உள்ளிட்டு ‘சமர்ப்பி’ என்பதைக் கிளிக் செய்யவும்.
பின்னர் உங்கள் PF பாஸ்புக் திரையில் காட்டப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |