ஆப்பிள் பயனர்களுக்கு இழப்பீடு - யாருக்கெல்லாம் கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது?
ஆப்பிள் நிறுவனம், பயனர்களுக்கு ரூ. 790 கோடி இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
இழப்பீடு வழங்கும் ஆப்பிள்
ஆப்பிள் நிறுவனம் பயனர்களின் தனியுரிமையை மீறியது தொடர்பான வழக்கில், 95 மில்லியன் டொலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.815 கோடி) இழப்பீடு வழங்க உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சேவையான சிரியிடம், பயனர்கள் மேற்கொள்ளும் உரையாடல்களை ஆப்பிள் நிறுவனம் சேமிப்பதாகவும், பயனர்களின் உரையாடல்கள் தொடர்பாக அவர்களுடைய ஐபோனிற்கு விளம்பரங்கள் வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக 2021 ஆம் ஆண்டு, கலிபோர்னியாவில் உள்ள ஒரு அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
ஆப்பிள் நிறுவனம் எந்தத் தவறும் செய்யவில்லை என மறுத்தாலும், நீண்ட காலமாக தொடரும் வழக்குகளைத் தவிர்ப்பதற்காக இழப்பீடு தர ஒப்புக்கொண்டது.
யாருக்கெல்லாம் கிடைக்கும்?
இந்த இழப்பீட்டை பெற, அமெரிக்காவில் உள்ள ஆப்பிள் பயனர், iPhone, iPad, MacBooks, Apple Watches, HomePods, iPod Touch, Apple TV ஆகிய சாதனங்களில் ஏதேனும் ஒன்றில், செப்டம்பர் 17, 2014 முதல் டிசம்பர் 31, 2024 வரை, Siri-யை பயன்படுத்தியிருக்க வேண்டும்.
மேலும், பயனர்கள் தனிப்பட்ட உரையாடலின் போது எதிர்பாராத Siri செயல்பாட்டை அனுபவித்திருக்க வேண்டும்.
ஜூலை 2, 2025, இதற்கு விண்ணப்பிப்பதற்கு கடைசி திகதி ஆகும்.
எப்படி விண்ணப்பிப்பது?
தகுதி பெற்றவர்கள், ஏற்கனவே "லோபஸ் வாய்ஸ் அசிஸ்டண்ட் கிளாஸ் ஆக்ஷன் செட்டில்மென்ட்" என்ற தலைப்பில் மின்னஞ்சல் மூலம் அறிவிப்பைப் பெற்றிருப்பார்கள்.
உங்களுக்கு மின்னஞ்சல் வராமல் இருந்தாலும், opezvoiceassistantsettlement.com என்ற தளத்திற்கு சென்றது உங்களை பற்றிய தகவல்கள், தகுதியான ஆப்பிள் சாதனம் குறித்த தகவல்களை உள்ளிட்ட வேண்டும்.
மேலும், தனிப்பட்ட உரையாடலின் போது Siri செயல்படுத்தப்பட்டதாக நீங்கள் நம்புவதாக அறிவிக்கவும் உங்களிடம் கேட்கப்படும்.
பயனர்கள் ஒரு சாதனத்திற்கு 20 டொலர் (இந்திய மதிப்பில் ரூ.1,709) வரை இழப்பீடு கோரலாம், அதிகபட்சம் 5 சாதனங்களுக்கு, அதாவது சிலருக்கு 100 டொலர் (இந்திய மதிப்பில் ரூ.8,544) வரை இழப்பீடு கிடைக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |