உங்களுக்கு தைராய்டு குறைபாடா? இதனை எப்படி சரி செய்யலாம்?
நமது கழுத்துப்பகுதியின் முன்பக்கத்தில் கீழிறங்கி அமைந்துள்ளது தான் தைராய்டு சுரப்பி.
உடலின் இயக்கத்திற்கு தேவையான முக்கிய ஹார்மோன்களை சுரக்கும் செயலை, இந்த தைராய்டு சுரப்பி மேற்கொள்கின்றது.
இந்த தைராய்டு சுரப்பி சுரக்கும் ஹார்மோனின் அளவு அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ நாம் தைராய்டு தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்று அர்த்தம்.
கவலை, சரியான உறக்கம் இல்லாமை, திடீர் உடல் எடை குறைவு, திடீர் உடல் எடை அதிகரிப்பு, தைராய்டு சுரப்பியில் வீக்கம், கண் பார்வை குறைபாடு, வெப்ப உணர்திறன், அசதி / சோர்வு , மறதி , குளிர் வெப்பநிலை உணர்திறன் போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும்.
இது உடலிற்கு பெரும் தீங்கினை ஏற்படுத்தி விடுகின்றன. இதனை ஆரம்பத்திலே கட்டுப்படுத்துவது நல்லது. அதற்கு உணவுமுறைகளில் மாற்றம் செய்தாலே போதும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
உணவுமுறை
- காலை உணவு : செர்ரி ஸ்மூத்தி, போஹா, ஊத்தப்பம், இட்லி, தயிர்
- மதிய உணவு : சாலட், பச்சை காய்கறிகள், டுனா மீன், உருளைக்கிழங்கு சூப், சிக்கன் சூப்
- இரவு உணவு : சாலட், சப்பாத்தி மற்றும் பருப்பு, பிரவுன் அரிசி சாதம், காய்கறிகள், கறுப்பு பீன்ஸ்
- சிற்றுண்டி : டார்க் சாக்லேட், வெள்ளைப்பூண்டு பிரட், பீனட் பட்டர், வாழைப்பழம்
நன்மைகள்
- இந்த உணவுமுறையை நாம் மேற்கொண்டால், இது தைராய்டு தொடர்பான குறறைபாடுகளை மட்டும் களைவதோடு மட்டுமல்லாது, உடலின் செரிமானம் மற்றும் குடல் இயக்கத்திற்கு உதவுகிறது
- நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, பல்வேறு நோய்கள் மற்றும் தொற்றுக்களில் இருந்து நம்மை காக்கிறது.
- இந்த உணவுமுறை இதய பராமரிப்பிற்கு உதவுவதோடு மட்டுமல்லாது, இதயம் தொடர்பான நோய்கள் வராமலும் காக்கிறது.
- உடல் சீராக இயங்க தேவையான சத்துக்களை இந்த உணவுமுறை உள்ளடக்கி உள்ளது. நீரிழிவு மற்றும் ஹைபர்டென்சன் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைகிறது.