1 லட்சம் Subscribers இருந்தால் போதும்...! கோடியில் சம்பாதிக்கலாம் தெரியுமா?
சமூக ஊடகங்கள் மூலம் பிரபலமாகும் பலர் இருக்கிறார்கள்.
அதில் அண்மைக்காலமாக YouTube மூலம் சம்பாதிக்கும் பிரபலங்கள் அதிகம்.
YouTube இல் தனக்கென ஒரு செனல் திறந்து அதில் Subscribers அதிகரித்துக்கொள்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.
ஒரு சேனலில் எவ்வளவு Subscribers இருந்தால் எவ்வளவு பணம் கிடைக்கும் என பார்க்கலாம்.
YouTube இல் சம்பாதிப்பது எப்படி?
பொதுவாக யூடியூபில் சேனல் வைத்திருப்பவர்கள் தங்கள் வீடியோக்களில் ஒளிபரப்பாகும் விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதித்து வருவார்கள்.
உங்களது YouTube சேனலில் குறைந்தது 1000 Subscribers மற்றும் 4000 Watch Hours இருந்தால் நீங்கள் YouTube Partner Programme மூலம் விண்ணப்பிப்பதன் மூலம் உங்களுக்கு வருமானம் வழங்கப்படும்.
ஒவ்வொரு ஆயிரம் விளம்பர பார்வைக்கும் அந்த விளம்பரதாரர் ஒரு குறிப்பிட்ட தொகையை YouTube இற்கு வழங்குவார். இதை YouTube 45 சதவீதத்தை எடுத்துக்கொண்டு மீதமுள்ள 55 சதவீதத்தை உங்களுக்கு அளிக்கும்.
அதுமட்டுமின்றி சில பொருட்களை பிரமோஷன் செய்து பணம் சம்பாதிப்பார்கள். ஒரு லட்சம் Subscribers வைத்திருப்பவர்கள் இந்திய ரூபாவில் ரூ.1,98,400 முதல் ரூ.3,30,770 வரை வருமானம் பெறலாம்.
ஆனால் சில குறிப்பிட்ட ஒரு காரணி மூலம் இந்த தொகை மாறுப்படும். Shorts மூலம் பணம் சம்பாதிக்க நினைத்தீர்கள் என்றால், 90 நாட்களில் 1000 Subscribers மற்றும் 10 மில்லியன் Views பெற்றிருக்க வேண்டும்.
இந்த முறையில் நீங்கள் வீட்டில் இருந்துக்கொண்டே கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |