முடி உதிர்வு முதல் நரை வரை; ஒரே இரவில் தீர்வு தரும் ஆயுர்வேத பொடி
முடி உதிர்தல் என்பது இன்றைய காலத்தில் ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. பல பெண்கள் முடி உதிர்வதால் சிரமப்படுகின்றனர்.
அதுமட்டுமின்றி, இன்றைய காலத்தில் வயதாகுவதற்கு முன்னரே நரைக்க ஆரம்பித்து விடுகிறது.
முடி உதிர்வதற்கும், முதிர்ச்சியடையாமல் நரைப்பதற்கும் முக்கியக் காரணம் நம் உடலில் தேவையான ஊட்டச்சத்துக்கள் இல்லாததே ஆகும்.
உணவுப் பழக்கம், ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட பல காரணங்களால் முடி உதிர்தல் மற்றும் நரை ஏற்படுகிறது.
எனவே நீளமான முடியையும் கருப்பான முடியையும் பெறுவதற்கு இந்த ஆயுர்வேதப் பொடியை பயன்படுத்தி பார்க்கலாம்.
முடி உதிர்வு முதல் நரை வரை
கறிவேப்பிலை, பிரிங்ராஜ், ஆம்லா மற்றும் பிரமி ஆகியவற்றைக் கலந்து இந்தப் பொடி தயாரிக்கப்படுகிறது.
இது முடி உதிர்வைக் குறைக்கிறது, முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது மற்றும் முடி முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்கிறது.
கறிவேப்பிலையில் பல சத்துகள் காணப்படுகிறது. இது முடிக்கு அதிக ஊட்டசத்தை வழங்குகிறது.
இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் B, வைட்டமின் C மற்றும் புரோட்டீன் ஆகியவை முடி மீண்டும் வளர உதவுவதோடு மட்டுமல்லாமல் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துகிறது.
பிரிங்ராஜில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றது. இது முடி உதிர்வைக் குறைக்கிறது மற்றும் உச்சந்தலையில் உள்ள பிரச்சனைகளை நீக்குகிறது.
நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால், முடி உதிர்வதைக் குறைக்கலாம் என்பது யாரும் அறிந்த விடயமே. வைட்டமின் சி மற்றும் பல ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நெல்லிக்காயில் காணப்படுகிறது. இது முடி உதிர்வைக் குறைப்பதன் மூலம் முடியை நீளமாக வளர உதவுகிறது.
முடி நரப்பதை தடுப்பதற்கு பிரம்மி பயனுள்ளதாக இருக்கிறது. முடி உதிர்வதைத் தடுத்து முடியை நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர உதவுகிறது.
ஆயுர்வேத பொடி தயாரிப்பது எப்படி?
முதலில் பிரிங்ராஜ், கறிவேப்பிலை, பிரமி மற்றும் ஆம்லா ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின் அனைத்தையும் ஒரே அளவில் கலந்து பொடியாக்கிக் கொள்ளவும்.
இறுதியாக தினமும் காலையில் வெறும் வயிற்றில் அல்லது தூங்கும் போது இந்த பொடியில் இருந்து ஒரு தேக்கரண்டி எடுத்து நெய்யுடன் கலந்து சாப்பிடவும்.
இதை சாப்பிடுவதன் மூலம் சில நாட்களில் நரை மற்றும் முடி உதிர்வு குறைவதை நீங்கள் உணர்வீர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |