உங்கள் நிலத்தில் தங்கம் இருந்தால்., அதை எப்படி கண்டுபிடிப்பது?
ஒவ்வொரு ஆண்டும் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. எனவே, தங்கத்தில் முதலீடு செய்வது அதிக லாபம் தரும்.
ஆனால் உங்கள் சொந்த நிலத்தில் தங்கம் இருந்தால் என்ன செய்வது? அதை எப்படி கண்டுபிடிப்பது என்று பார்ப்போம்.
பூமியில் உள்ள எந்த உலோகத்தையும் இரண்டு வழிகளில் காணலாம். அதில் முதல் முறை GPR (ground penetrating radar) அதாவது தரையில் ஊடுருவும் ரேடார் தொழில்நுட்பம்.
இரண்டாவது முறை VLF (Very Low Frequency) அதாவது மிகவும் குறைந்த அதிர்வெண் தொழில்நுட்பம்.
இதன் உதவியுடன், இந்திய தொல்லியல் துறையும், இந்திய புவியியல் ஆய்வு மையமும் நிலத்தில் தங்கம் அல்லது ஏதேனும் உலோகம் இருப்பதைக் கண்டறிகின்றன.
GPR பூமியின் ஒவ்வொரு அடுக்கையும் ஆய்வு செய்கிறது. இந்தச் சோதனையின் அடிப்படையில் மண்ணில் எந்தெந்த உலோகங்கள் உள்ளன என்பதைத் தீர்மானிக்க முடியும்.
அதேசமயம் VLF என்பது பூமியில் தங்கம், வெள்ளி அல்லது தாமிரம் உள்ளதா என்பதைக் கண்டறியும் ஒரு நுட்பமாகும்.
VLF பயன்படுத்தப்படும் போது, அது பூமியின் அந்த பகுதியை சுற்றி ஒரு மின்காந்த புலத்தை உருவாக்குகிறது. அப்போது இயந்திரத்தில் இருந்து வெளிப்படும் அலைகள் உலோகத்துடன் மோதி ஒலியை உருவாக்குகின்றன.
அந்த ஒலியின் அடிப்படையில் மட்டும் எந்த உலோகம் பூமிக்கடியில் உள்ளது என்பதை அறிய முடியும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Gold Detecting, Metal Detecting Methods, Gold Detecting Methods, GPRm ground penetrating radar, VLF, Very Low Frequency