ரூ.8900 செலவில் துபாயில் நோமாட் விசா பெறுவது எப்படி? வழிமுறைகள் மற்றும் தேவையான ஆவணங்கள் என்னென்ன?
நீங்கள் உங்கள் வேலையை தொடர்ந்து கொண்டே ஓராண்டு காலம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உங்களால் வசிக்க முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா?
ஆனால் அது உண்மை தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தங்களுடைய டிஜிட்டல் நோமேட் விசா(Digital Nomad Visa) மூலம் இதனை சாத்தியப்படுத்திகிறது.
இந்த டிஜிட்டல் நோமேட் விசா மூலம் உங்களது வேலையை தொடர்ந்து கொண்டே துபாயில் உங்கள் பொன்னான நேரத்தை மகிழ்ச்சியுடன் செலவு செய்யலாம்.
துபாயின் டிஜிட்டல் நோமாட் விசா என்றால் என்ன?
UAE தங்களது விர்ச்சுவல் வொர்க்கிங் புரோகிராம் என்ற திட்டத்தின் மூலம் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வெளியே வேலை புரியும் நபர்களுக்கு ஒராண்டுக்கான தங்கும் விசாக்களை வழங்குகிறது.
இந்த நோமேட் விசாவில் துபாய்க்கு வருபவர்கள் எந்தவொரு உள்ளூர் முதலாளியின் அனுமதியோ அல்லது ஸ்பான்சரோ தேவை இல்லை.
நோமேட் விசாவை பெறுவதற்கான தகுதிகள் மற்றும் தேவைகள்
நீங்கள் UAE-க்கு வெளியே பணி புரிபவராகவோ அல்லது வணிகம் செய்பவராகவோ இருக்க வேண்டும்.
உங்களது வேலைக்கான அல்லது வணிகத்திற்கான ஓராண்டு ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
உங்களது வருமானம் குறைந்தது AED 12,856( அமெரிக்க டொலர் மதிப்பில் சுமார் 3,500 USD) ஆக இருக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்
குறைந்தது 6 மாதம் செல்லுபடியாகும் பாஸ்போர்ட்
சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
வேலை அல்லது வணிகத்திற்கான ஆதாரம்.
வருமானத்தை உறுதிப்படுத்துவதற்கான 3 மாத சம்பள ரசிது அல்லது வங்கி கணக்கு வரவு.
குற்றப் பின்னணி இல்லாத நபர் என்பதற்கான ஆதாரம்.
துபாயில் தங்குமிடம் தொடர்பான ஆதாரங்கள் மற்றும் துபாயில் நீங்கள் தங்கும் போது உங்களுக்கான உயிர் காப்பீட்டுக்கான ஆதாரம் ஆகியவை.
கட்டணம் மற்றும் விண்ணப்ப செயல்முறை
தேவையான ஆவணங்கள் சரிபார்த்தல்.
பின்னர் நீங்கள் GDRFA துபாய் இணைய வழி அல்லது துபாயில் உள்ள Amer Center-க்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.
தேவையான ஆவணங்கள் தயாராக வைத்தல்.
விசா கட்டணம் செலுத்துதல். (ஆரம்ப விசா கட்டணம் சுமார் AED 372.5(இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.8876) ஆகும்
துபாயில் இந்த நோமாட் விசா குறைந்தது 5 முதல் 6 நாட்களில் அங்கரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |