German freelance visa: சில பயனுள்ள தகவல்கள்
படித்த, சொந்தத் தொழில் செய்வோர், வேலை வழங்கும் ஒருவரை சார்ந்திருக்காமல் ஜேர்மனியில் தங்கியிருக்க உதவும் வகையில் ஜேர்மனி, விசா ஒன்றை வழங்குகிறது.
அதன் பெயர் ஃப்ரீலான்ஸ் விசா!
German freelance visa
ஒருவர் தனக்கு வேலையிருப்பதையும், தனது செலவுக்கு போதுமான பணம் இருப்பதையும் நிரூபிக்கும் பட்சத்தில், அவர் ஜேர்மனியில் சுதந்திரமாக வேலை செய்ய இந்த ஃப்ரீலான்ஸ் விசா உதவுகிறது.
மேலும், இந்த விசா வைத்திருப்போர், ஜேர்மனியில் மூன்று ஆண்டுகளுக்கு தங்கலாம், அந்த காலகட்டம் நீட்டிக்கவும் படலாம் என்பதுடன், அவர்கள் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்கவும் இந்த விசா அனுமதிக்கிறது.
ஃப்ரீலான்ஸ் விசா பெறுவதற்கான நிபந்தனைகள்
ஃப்ரீலான்ஸ் விசாவுக்கு விண்ணப்பிக்கும் நபர், ஜேர்மனியுடன் விசா ஒப்பந்தம் இல்லாத நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
அப்படி அவர் ஜேர்மனியுடன் விசா ஒப்பந்தம் செய்து கொண்ட நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர் 90 நாட்களுக்கு மேல் ஜேர்மனியில் தங்க விரும்பினால் ஃப்ரீலான்ஸ் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஃப்ரீலான்ஸ் விசாவுக்கு விண்ணப்பிக்கும் நபர், டிப்ளமோ அல்லது தொழிற்கல்வி பயிற்சி போன்ற தொழில்முறை உரிமத்தை வைத்திருக்க வேண்டும்.
அவர் தனது நிதி ஆதாரச் சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும்.
அவர் 45 வயதுக்கு மேல் உள்ளவராக இருந்தால், தக்க, ஓய்வூதியத்திற்கான சான்று வழங்கப்பட வேண்டும்.
அவருக்கு, தொழில் செய்வதற்கு போதுமான நிதி ஆதாரங்கள் இருக்க வேண்டும், அதாவது பங்கு மூலதனம் அல்லது கடன் உறுதிமொழி போன்றவற்றை அவர் வைத்திருக்கவேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |