தீக்காயங்களால் ஏற்பட்ட சரும தழும்புகளை போக்க வேண்டுமா? இதோ சில எளிய டிப்ஸ்
பொதுவாக அழகைக் கெடுப்பதில் தழும்புகள் முக்கிய பங்கினை வகிக்கிறது.
குறிப்பாக தீயினால் ஏற்பட்ட தழும்புகள். சமைக்கும் போது சூடான எண்ணெய் படுவது, துணியை இஸ்திரி போடும் போது சூடு வைத்துக் கொள்வது போன்றவற்றால் தான் தழும்புகளைப் பெறுகிறார்கள். இத்தகைய தழும்புகளை நன்கு தெளிவாக தெரியும்.
இதனை போக்க எத்தனை க்ரீம்கள் கடைகளில் விற்றாலும், அதைப் பயன்படுத்தினால், எந்த ஒரு பலனும் இருக்காது.
ஆனால் அத்தகைய தழும்புகளைப் போக்க சில இயற்கை முறைகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தினால், அசிங்கமாக தெரியும் தழும்புகளை சற்று மங்க வைப்பதோடு, மறையவும் வைக்கலாம். தற்போது அவற்றை பார்ப்போம்.
image - cosmeticlaservaranasi
- தீக்காயத்தை மந்தமான நீரில் கழுவி விடவும். புதிய எலுமிச்சை புதிய தக்காளி சாறு எடுத்துகொள்ளவும். மெல்லிய துணியை நனைத்து சில மணி நேரம் அந்த எரிச்சல் மிக்க இடத்தில் வைக்கவும். துணியை எலுமிச்சை சாற்றில் நனைத்து மெதுவாக துடைக்கவும். உலர்ந்த பிறகு தக்காளி சாற்றை தடவி எடுக்கவும் .இது சில நாட்களில் தீக்காயத்தை ஆற்றலாம். தீக்காயங்களிலிருந்து விடுபட நாள் ஒன்றுக்கு இரண்டு முறை செய்யவும்.
- பாதாம் எண்ணெயை கொண்டு வடுவை மெதுவாக மசாஜ் செய்யவும். ஒரு நாளைக்கு இரண்டு முறை வடுவை மசாஜ் செய்வது வடுவை படிப்படியாக குறைக்க உதவும்.
-
வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து நன்றாக விழுதாக அரைக்கவும். இந்த கலவையை தீக்காயங்கள் உள்ள இடத்தில் மெதுவாக தடவி விட்டு விடுங்கள்.
பேஸ்ட் முழுவதுமாக காய்ந்ததும் அதை தண்ணீரில் கழுவலாம். தழும்புகளை நீக்க இதை தொடர்ந்து பயன்படுத்தி வரவும். இதனுடன் மஞ்சள் தூள் சிட்டிகை கலந்து தடவவும். இது கிருமிந் நாசினி என்பதால் சருமத்தில் நன்றாக வேலை செய்யும். தோல் பிரச்சனைகளை வெல்லவும் இவை உதவுகிறது.
- தீக்காயத்துக்கு லாவெண்டர் எண்ணெய் பயன்படுத்தினால் விரைவாக தடவினால் வடு இல்லாமல் குணமாகும். பெரிய தீக்காயங்களுக்கு லாவெண்டர் எண்ணெய் ஒரு துணியில் ஊற்றி ஒவ்வொரு சில மணி நேரங்களுக்கும் தீக்காயத்தின் மேல் தடவி விடவும்.
- உருளைக்கிழங்கு தோலுரித்து எரிந்த இடத்தில் தடவவும். கூடுதல் நிவாரணத்துக்காக நீங்கள் இதை கட்டுபோல சுற்றிலும் கட்டி கொள்ளலாம்.
-
பார்லி, மஞ்சள் மற்றும் தயிர் சம பாகங்களை கலந்து பயன்படுத்துவது தீக்காயங்களுக்கு நல்லது. வலி நிவாரணம் மற்றும் குணமடைய பாதிக்கப்பட்ட பகுதியில் இதை பயன்படுத்தலாம்.
- பெரிய பருத்தி துணியை எரித்து அதன் சாம்பலை எடுத்து ஆலிவ் எண்ணெயுடன் கலக்கவும்.இந்த கருப்பு பேஸ்ட்டை எரிந்த தோலில் தடவி, ஒட்டி விடவும். சில நொடிகளில் அதன் அதிர்ச்சி தீவிரம் மறைந்துவிடும். பிறகு மீண்டும் புதிய பேஸ்ட்டை பயன்படுத்தவும். தீக்காயங்களை தொடர்ந்து ஒரு வாரம் அல்லது அதற்கு மேல் பேஸ்ட்டை பயன்படுத்தவும்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.