மேல் உதட்டில் உள்ள முடியை இயற்கையான முறையில் அகற்றுவது எப்படி?
ஒவ்வொரு பெண்ணும் நெற்றி, புருவம் மற்றும் மேல் உதடுகளுக்கு மேல் முடி இருப்பதை விரும்ப மாட்டார்கள்.
அதை எப்படி நீக்குவது என்று தெரியாமல் ஒவ்வொரு பெண்களும் அவஸ்தை படுவது தான் வழக்கம்.
இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையாவது பெண்கள் த்ரெடிங்கிங் செய்து முகத்தில் உள்ள முடியை நீக்குவார்கள். ஆனால் அதில் இருக்கும் வலியை தாங் முடியாமல் கண்ணீர் விடுவார்கள்.
எனவே வீட்டு சமையலறையில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்து எப்படி முகத்தில் உள்ள முடியை நீக்கலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
சீனி
ஒரு பாத்திரத்தில் 1 கப் சர்க்கரை, 1/4 கப் எலுமிச்சை சாறு மற்றும் 1/4 கப் தண்ணீர் சேர்த்து 30 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து எடுக்கவும்.
பின் இதை உதட்டின் மேல் பகுதியில் தடவி சில வினாடிகள் வைத்திருங்கள்.
அடுத்து அதை விரைவாக இழுக்கவும்.
முட்டை வெள்ளை கரு
முட்டையின் வெள்ளைக்கரு, உதடுகளின் மேல் உள்ள முடியைப் போக்கப் பயன்படும் மற்றொரு இயற்கை தீர்வாகும்.
ஒரு முட்டையின் வெள்ளைப் பகுதி, ஒரு தேக்கரண்டி சர்க்கரை மற்றும் ஒரு தேக்கரண்டி சோள மாவு சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
பின் அதை உதட்டின் மேல் பகுதியில் தடவி, உரித்து எடுக்கவும்.
பால் மற்றும் மஞ்சள்
பால் மற்றும் மஞ்சள் தூள் கலவையானது முடியை அகற்றுவது மட்டுமல்லாமல், உங்கள் சருமத்தை சுத்தமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்கும்.
மஞ்சள் மற்றும் பால் சேர்த்து கலந்து பேஸ்ட் உருவாக்கவும். பின் அதை உதட்டின் மேல் பகுதியில் பூசி குளிர்ந்த நீரை பயன்படுத்தி கழுவவும். இதை வாரத்தில் மூன்று முறை செய்வது நல்லது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |