உடலின் மெட்டபாலிசத்தை எளியமுறையில் அதிகரிக்க வேண்டுமா? இந்த 10 சைவ உணவுகள் மட்டும் போதும்!
Health info
Metabolism
How to increase it
By Balakumar
மெட்டபாலிசம் என்பது நாம் சாப்பிட்ட உணவு செரிக்கப்பட்டு அதிலிருந்து நியூட்ரிஷியன்கள் பிரித்து நம் உடலில் சேருகிற நடைமுறையை குறிப்பிடுகிறது.
வயதாக வயதாக இந்த மெட்டபாலிசம் குறைந்திடும். இது இயற்கையாகவே நம் உடலில் நடைபெறக்கூடியது.
மெட்டபாலிசம் குறைவாக இருக்கிறது என்றால் நீங்கள் எப்போது சோர்வாகவும், எதிலும் ஈடுபாடு இல்லாமலும் இருப்பீர்கள்,பருக்கள் உண்டாகும், செரிமானம் தாமதமடையும்.
இதனை ஆரம்பத்திலே பார்த்து சரி செய்வது நல்லது. இதற்கு மெட்டபாலிசத்தை அதிகரிக்க செய்யும் உணவுகளை எடுப்பது நல்லது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
- அஸ்பாரகஸில் நார்ச்சத்து வளமையாக உள்ளது. மேலும் உடலில் உள்ள இன்சுலின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவும். வயதாகும் செயல்முறையும் கூட இதனால் தாமதாகும்.
- நார்ச்சத்து நிறைந்த பயறு வகைகளில் ஒன்றான பீன்ஸில் புரதம், இரும்பு, கார்போஹைட்ரேட்ஸ், கால்சியம் மற்றும் ஃபோலேட் உள்ளது, இது புற்றுநோயை எதிர்த்தும் போராடும்.
- செலரி என்பது நார்ச்சத்து வளமையாக உள்ள ஆல்கலைன் காய்கறியாகும்.
- வைட்டமின் பி வளமையாக உள்ள வெள்ளரிக்காய் உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
- பூண்டு உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் அலர்ஜிகளிடம் இருந்து உடலை வலுவாக்கவும் உதவும்.
- காரமான மிளகுகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வளமையாக உள்ளது. இது உடல் எடையை குறைக்க உதவும்.
- பச்சை இலை காய்கறியான கீரையில் எண்ணிலடங்கா ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. இதில் இரும்புச் சத்தும் வளமையாக உள்ளது. மற்ற இயல்பான உடல்நல பயன்களை தவிர, கண் நோய்களை எதிர்த்தும் இது போராடும்.
- சிறுநீரக பாதை தொற்றுக்கள் மற்றும் கண் தொற்றுக்களை குறைக்க, சாறு நிறைந்த காயான தக்காளி உதவும்.
- கால்சியம் வளமையாக நிறைந்துள்ள ப்ராக்கோலி, எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவுவதோடு புற்று நோய் ஏற்படாமல் தடுக்கவும் செய்யும்.
- ஒமேகா-3 வளமையாக உள்ள ஆளி விதைகள் லெப்டின் என்ற ஹார்மோன் சுரப்பதை குறைக்கும். இந்த ஹார்மோன் அதிகமாக சுரக்கும் போது, மெட்டபாலிச அளவு குறையத் தொடங்கும்.
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US