நுரையீரலை பத்திரமாக பாதுாக்க இந்த 5 உணவுகளை மறக்காமல் சாப்பிடுங்க
மோசமான நுரையீரல் இருமல், சளி மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும், சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கும், பல ஆரோக்கிய நன்மைகளைப் பெறுவதற்கும் வீட்டில் இருக்ககூடிய சமையல் பொருட்கள் உதவியாக இருகின்றது.
அந்தவகையில் நுரையீரலை பாதுகாத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
பூண்டு
பூண்டில் பல நன்மைகள் நிறைந்துள்ளது. அதை தினமும் நாம் சாப்பிடும் உணவில் சேர்த்து வந்தால், நுரையீரல் புற்றுநோய் வருவதை தடுக்கலாம்.
நுரையீரலில் தொற்று வியாதியை உண்டாக்கும் வைரஸ் பாக்டீரியாக்களை அழிக்கும் வல்லமை கொண்டது.
ஆகவே தினமும் இரண்டு அல்லது மூன்று பல பூண்டை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
துளசி
எல்லா வகையான சுவாச பிரச்சினைகளையும் தீர்க்கும் ஒரு மூலிகையாக துளசி விளங்குகின்றது. இதன் இலையை மென்று சாப்பிட்டால் சுவாச பிரச்சினையில் இருந்து விடுப்படலாம்.
மிளகு தூள்
மிளகில் வைட்டமின் சி, ப்ளேவனாய்டு, ஆண்டி ஆக்ஸிடண்ட் மற்றும் ஆண்டிபாக்டீரியல் தன்மை நிறைந்துள்ளது. ஆகவே இதை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயில் இருந்து தீர்வு கிடைக்கும்.
மஞ்சள்
மஞ்சளில் ஆன்டி ஆக்ஸிடெண்ட் தன்மை நிறைந்துள்ளது. உடம்பில் நோய் எதிர்ப்பு தன்மையை வேகமாக அதிகரிக்க செய்யும். ஆகவே இதை தினமும் சாப்பிட்டு வந்தால் சளி, தொண்டை கரகரப்பு ஆகியவற்றை குணமாகும்.
ஏலக்காய்
ஏலக்காய், பச்சை மற்றும் கறுப்பு நிறத்தில் கிடைக்கும். இவை இரண்டுமே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சளி, இருமல் மற்றும் நுரையீரல் கோளாறுகளை சரி செய்யும். தினமும் ஒரு கப் இந்த பாலில் கலந்து குடித்தால் நல்லது.
புதினா
தினமும் 3 அல்லது 5 புதினா இலையை சாப்பிட்டால் நுரையீரல் வலிமையாகும். அதிமதுரச் சூரணத்தை (பொடி) 2 கிராம் அளவு தேனில் குழைத்து, தினமும் இரண்டு வேளை சாப்பிட்டால், தொண்டைக் கட்டு மற்றும் இருமல் சளி முற்றிலும் குணமாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |