ஆதாரை- பான் கார்டுடன் இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு! லிங்க் செய்யும் முறை இது தான்
மத்திய அரசு ஆதார் கார்ட்டை, பான் கார்டுடன் இணைக்க மேலும் 2 மாதங்கள் கூடுதலாக கால அவகாசம் கொடுத்துள்ளது.
ஆதார், பான் இணைப்பு
pan card பயன்படுத்தும் ஒவ்வொரு இந்திய குடிமகனும் பானை ஆதாரோடு இணைக்க வேண்டுமென மத்திய அரசு முன்னர் அறிவித்திருந்தது.
கடந்த மார்ச்31 ஆம் தேதி வரை கொடுக்கப்பட்டிருந்த கால அவகாசம் தற்போது முடிவடைந்த நிலையில் மத்திய அரசு மேலும் கூடுதலாக கொடுத்துள்ளது.
மேலும் ஆதாருடன் பான் கார்ட்டை இணைப்பது கட்டாயம் என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இணைக்கும் முறை எப்படி
www.incometax.gov.in என்ற இணைய தளத்தில் சென்று, link adhaar என உள்ள ஆப்சனை சொடுகி, பின் உங்களது ஆதார் மற்றும் பேன் எண்ணை கொடுக்க வேண்டும்.
அதன் பின் உங்களது எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வரும். அதனை குறிப்பிட்ட இடத்தில் உள்ளீடு செய்ய வேண்டும்.
பின்னர் pan-யை ஆதாருடன் இணைக்க மார்ச்31 திகதிக்கு பிறகு அபராதம் என அறிவித்திருந்தது.
அதன்படி குறிப்பிட்ட தொகையை விண்ணப்பதாரர்கள் இணைய சேவை மூலம் செலுத்த வேண்டும். பின்னர் ஆதாரை பான் கார்டுடன் எளிதில் இணைக்கப்படும்.