முழங்கால் வரை முடி வளர இந்த ஒரு எண்ணெய் போதும்.., வீட்டிலேயே எப்படி தயாரிப்பது?
பலபேருக்கு வழுக்கை, முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பிரச்சனைகள் காரணமாக முடி கொட்டி விடுகின்றன.
முடி வளர்ப்பது என்பது தற்போது அனைவருக்கும் இருக்கும் ஒரு ஆசைதான்.
அந்தவகையில், அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கருஞ்சீரகம்- ½ கப்
- தேங்காய் எண்ணெய்- 1 கப்
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு கருஞ்சீரக விதைகளைப் நன்கு பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் இதில் தேங்காய் எண்ணெயைச் சேர்த்து ஒரு பாட்டிலில் ஊற்றி நன்கு கலக்கவும்.
பிறகு இந்த பாட்டிலை சூடான இடத்தில் இரண்டு வாரங்கள் வரை விடவும்.
அதன் பின், விதைகளை வடிகட்டி, மீண்டும் எண்ணெயை பாட்டிலில் ஊற்றி பயன்படுத்தலாம்.
இந்த எண்ணெயை உச்சந்தலையில் நன்கு தேய்த்து மசாஜ் செய்து 20 நிமிடம் ஊறவைத்து பின் அலசிக்கொள்ளலாம்.
கிடைக்கும் நன்மைகள்
1. முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது.
2. வீக்கத்தைக் குறைக்கிறது.
3. ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கிறது.
4. தடிப்புத்தோல் அழற்சி குறைக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |