கட்டுக்கடங்காத கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் கறிவேப்பிலை எண்ணெய்- எப்படி தயாரிப்பது?
பொதுவாக ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் முடி உதிர்வு.
அந்தவகையில், கட்டுக்கடங்காத கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் கறிவேப்பிலை எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கறிவேப்பிலை- 2 கைப்பிடி
- தேங்காய் எண்ணெய்- 2 கப்
- வெந்தயம் - 2 ஸ்பூன்
- நெல்லிக்காய்- 1
தயாரிக்கும் முறை
முதலில் கறிவேப்பிலையை நன்கு சுத்தம் செய்துக் கொண்டு நிழலில் காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய்யை ஊற்றி மிதமான தீயில் வைத்து காய்ச்ச வேண்டும்.
தேங்காய் எண்ணெய் சூடானதும் அதில் உலர்த்தி வைத்துள்ள கறிவேப்பிலை இலைகள், வெந்தயம் மற்றும் நெல்லிக்காயை லேசாக தட்டி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
எண்ணெய் நன்கு கொதித்து வந்தவுடன் நிறம் மாறியதும் எண்ணெய்யை வடிகட்டிவும்.
இந்த எண்ணெய்யை வாரத்திற்கு ஒருமுறை தலைமுடியின் வேரிலிருந்து நுனி வரை தடவவும்.
தொடர்ச்சியாக கறிவேப்பிலை எண்ணெயை பயன்படுத்தி வர தலைமுடி வேகமாக வளர உதவியாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |