அசுர வேகத்தில் முடி வளர இந்த ஒரு இலையின் எண்ணெய் போதும்: எப்படி தயாரிப்பது?
பெண்களுக்கு பொதுவாக முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பல பிரச்சனைகள் இருக்கும்.
தலைமுடிக்கு சரியான பராமரிப்பு, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், தூக்க நேரம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
அந்தவகையில், முடி அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர உதவும் கறிவேப்பிலை எண்ணெயை பற்றி பார்க்கலாம்.
முடிக்கு கறிவேப்பிலை எண்ணெய்
கறிவேப்பிலையில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் உள்ளன.
இதிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெயில் இருந்து முடிக்கு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பீட்டா கரோட்டின் கிடைக்கிறது.
கறிவேப்பிலை எண்ணெய் உச்சந்தலையைப் பாதுகாக்கவும், பொடுகைக் குறைக்கவும் உதவுகிறது.
மேலும், நரை முடியை குறைக்கவும், முடி வளர்ச்சியைத் தூண்டவும், முடியின் வறட்சியை குறைத்து மென்மையாக்கவும் உதவுகிறது.
எப்படி தயாரிப்பது?
முதலில் 1 கப் கறிவேப்பிலையை கழுவி உலர வைக்கவும்.
இப்போது கடாயில் 1 கப் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.
அதன் பிறகு அரை ஸ்பூன் நைஜெல்லா விதைகள் மற்றும் வெந்தய விதைகளை சேர்க்கவும்.
சிறிது நேரம் வதங்கிய பின் அதில் கறிவேப்பிலை சேர்த்து 15 நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்து அடுப்பை அணைக்கவும்.
பின் நன்கு ஆறியதும் இதனை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து பயன்படுத்தவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |