பரட்டை போல் முடி இருக்கா? வீட்டிலேயே இயற்கை முறையில் Hair Smoothening Cream செய்யலாம்
பலருக்கும் இருக்கும் சுருள் முடி, வறண்ட முடி போன்றவை பிடிக்காமல் அழகு நிலையங்களுக்கு சென்று அதிகம் செலவு செய்து முடியை மென்மையாக மாற்றிக்கொள்கிறார்கள்.
இயற்கை தலைமுடியின் தோற்றத்தை மாற்றி அமைக்க ரசாயன கலவை கொண்ட பொருட்களை தலைமுடியில் பயன்படுத்துவதன் மூலம் நமது முடிக்கும் பலவிதமான பாதிப்புகள் உண்டாகின்றன.
அந்தவகையில் வீட்டிலேயே இயற்கையான பொருட்களை பயன்படுத்தி Hair Smoothening Cream எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்?
தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு- 1
- சோள மாவு- 2 ஸ்பூன்
- வாழைப்பழம்- 1(பச்சை வாழைப்பழம் தவிர)
செய்முறை
முதலில் உருளைக்கிழங்கை தோல் சீவி பின் நன்கு கழுவி சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.
பின் நறுக்கிய உருளைக்கிழங்கை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் அரைத்த பேஸ்டை ஒரு பருத்தி துணியில் சேர்த்து அதன் சாற்றை மட்டும் பிழிந்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து இந்த உருளைக்கிழங்கு சாற்றுடன் சோள மாவு சேர்த்து கலந்த பின் அடுப்பில் வைத்து கிரீம் பதம் வரும்வரை நன்கு கலந்து எடுத்து ஆறவைக்கவும்.
இறுதியாக ஒரு மிக்ஸிஜாரில் வாழைப்பழம் சேர்த்து அரைத்து எடுத்த உருளைக்கிழங்கு கலவையுடன் சேர்த்து கலந்தால் இயற்கையான Hair Smoothening Cream தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |