சமைத்த சாதம் மிஞ்சிவிட்டதா? மொறு மொறு வத்தல் செய்யலாம்
பொதுவாக வீட்டில் சமைக்கும் சாதம் மிஞ்சிவிடும். அதை வீணாக்காமல் இதுபோல் மொறு மொறு வத்தல் செய்யலாம்.
பழைய சாதம் மீந்து போனால் அதை தூக்கி போடாமல் இப்படி வடகம் செய்து சாப்பிட்டால் அதன் ருசி மிகவும் அருமையாக இருக்கும்.
இந்த வடகம் சாம்பார் சாதம், வத்தல் குழம்பு, புளிக்குழம்பு என அனைத்திற்கும் தொட்டு சாப்பிட ருசியாக இருக்கும்.
பழைய சாதம் மீந்து போனால் எப்படி மொறு மொறுவென்று வத்தல் செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சாதம்
- உப்பு
- சீரகம்
- மிளகாய் தூள்
- எண்ணெய்
செய்முறை
முதல் நாள் மீதமான சாதத்தை தண்ணீர் ஊற்றி வைக்கவும். அடுத்த நாள் அதை நன்றாக பிழிந்து ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளுங்கள்.
பிறகு அந்த சாதத்துடன் தேவையான அளவு உப்பு, சீரகம், காரத்திற்கு ஏற்ற அளவு மிளகாய் பொடியை சேர்த்து கொள்ளவும்.
இதனைத்தொடர்ந்து அனைத்தையும் நன்றாக பிசைந்து எடுத்து கொள்ளுங்கள்.
பிறகு ஒரு தட்டில் எண்ணெய்யை நன்றாக தடவி அதில் பிசைந்து வைத்துள்ள சாதத்தை தேவையான அளவிற்கு சிறிய சிறிய துண்டாக போட்டுக்கொள்ளவும்.
பிறகு இதை நன்றாக வெயிலில் காயவைத்து வத்தலை எடுத்து, அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
எண்ணெய் காய்ந்ததும் இந்த வத்தலை போட்டு பொரித்து சாப்பிட்டால் மொறு மொறுவென்று சுவையாக இருக்கும்.
இதனை ஒரு டப்பாவில் போட்டு வைத்து நீண்ட நாட்களுக்கு வறுத்து சாப்பிடலாம். கெட்டுப்போகாமல் இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |