சாதம் மிஞ்சிவிட்டதா? பத்தே நிமிடத்தில் பஞ்சு போல் இட்லி செய்யலாம்
பொதுவாக வீட்டில் சமைக்கும் சாதம் மிஞ்சிவிடும். அதை வீணாக்காமல் பஞ்சு போல் இட்லி செய்து சாப்பிடலாம்.
இதை சாப்பிட வித்யசமாகலாம் இருக்காது. அன்றாட செய்யும் இட்லியின் சுவையில் தான் இருக்கும்.
பத்தே நிமிடத்தில் பஞ்சு போல் இட்லி இதனை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ரவை- 1 கப்
- சாதம்- 1½ கப்
- தண்ணீர்- 1 கப்
- உப்பு- தேவையான அளவு
- தயிர்- 1 கப்
- பேக்கிங் சோடா- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு வாணலில் ரவை சேர்த்து மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் மிஞ்சிய சாதம் சேர்த்து தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து இதில் வறுத்த ரவை மற்றும் தயிர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த வைத்த மாவை சேர்த்து அதில் தேவையான அளவு உப்பு மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.
பின் இந்த மாவை ஒரு 15 நிமிடத்திற்கு மூடி போட்டு அப்படியே வைக்கவும்.
இதனைத்தொடர்ந்து இட்லி பாத்திரத்தில் கலந்து வைத்துள்ள மாவை சேர்த்து வேகவைத்து எடுத்தால் பஞ்சி போல் இட்லி தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |