நரைமுடியை கருப்பாக மாற்றும் இயற்கை ஹேர் டை.., இந்த ஒரு இலை போதும் ஈசியா தயாரிக்கலாம்
ஆண், பெண் என இருவருக்கும் முடி உதிர்தல், வலுவிழந்த முடி, வறண்ட முடி, பொடுகு மற்றும் நரை முடி போன்ற பிரச்சனைகள் இருக்கிறது.
இன்றைய நாளில் பெரும்பலான இளைஞர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை நரை முடி.
நரை முடியை கருப்பாக மாற்ற கடைகளில் விற்கப்படும் ரசாயனம் கலந்த ஹேர் டை போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகிறது.
நரைமுடியை நிரந்தரமாக கருமையாக மாற்ற இந்த ஒரே ஒரு ஹேர் டை போதும். இதனை எப்படி தயாரித்து பயன்படுத்துவது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கறிவேப்பிலை- 2 கைப்பிடி
- கற்றாழை ஜெல்- 1 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய்- 2 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
முதலில் எடுத்து வைத்துள்ள கறிவேப்பிலையை கழுவி சுத்தம் செய்து 1 மணி நேரம் உலர்த்தி எடுத்துக்கொள்ளவும்.
பின் வானலை அடுப்பில் வைத்து மிதமான தீயில் கறிவேப்பிலை சேர்த்து நன்கு கருமை நிறம் வரும்வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து இதனை நன்கு ஆறவைத்து பின் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அரைத்த துகள்களை சலித்து பின் ஒரு டப்பாவில் போட்டு சேகரித்து வைத்துக்கொள்ளவும்.
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு பவுலில் 2 ஸ்பூன் கருவேப்பிலை பொடி, கற்றாழை ஜெல் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும்.
இதனை உங்கள் தலைமுடி முழுக்க படும்படி தடவி 30 நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்து கொள்ளவும்.
Shutterstock
பின் 1 மணி நேரம் அப்படியே விட்டுவிடவும். ஒரு மணி நேரத்திற்கு பின் தலைமுடியை மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.
இந்த ஹேர்டையை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தி வந்தால் உங்கள் நரைமுடி அனைத்தும் நீங்கி கருமையாக மாறிவிடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |