வைட்டமின் C மற்றும் A நிறைந்த சர்க்கரைவள்ளி கிழங்கு பாயாசம்! இப்படி செய்யுங்க
சர்க்கரைவள்ளி கிழங்கில் வைட்டமின் C மற்றும் A ஆகிய சத்துக்கள் சம அளவில் உள்ளதால், இதனை உட்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் ஏற்படும். நார்ச்சத்து நிறைந்துள்ளதால் ஜீரன சக்தியையும் அதிகரிப்பது மட்டுமல்லாமல் பார்வை கூர்மையையும் அதிகரிக்கும்.
மேலும், இந்த கிழங்கு இரத்த அழுத்தம் உடையவருக்கு நல்ல மருந்தாகவும் இருக்கும். இத்தனை நன்மைகள் கொண்ட சர்க்கரைவள்ளி கிழங்கில் பாயாசம் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
சர்க்கரை வள்ளிக் கிழங்கு - 1
ஜவ்வரிசி - 2 டேபிள் ஸ்பூன்
பால் - 3 கப்
ஏலக்காய் - 1 டேபிள் ஸ்பூன்
பாதாம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
* முதலில் ஜவ்வரிசியை தண்ணீரில் 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
*குக்கரில் சர்க்கரைவள்ளிக் கிழங்கை போட்டு தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். பின்னர், அதனை தோல் உரித்து சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
*இதன் பின், பாத்திரத்தில் பால் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து, அதனுடன் ஊற வைத்துள்ள ஜவ்வரிசியைச் சேர்த்துக் கலக்கவும்
* பால் கட்டி பதத்திற்கு வரும் நேரத்தில் சர்க்கரை மற்றும் முந்திரி, பாதாம் சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.
* கடைசியாக சர்க்கரைவள்ளி கிழங்கை சேர்த்து கட்டி பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும்.
* பிஸ்தா அல்லது முந்திரி இருந்தால் அதன் மீது தூவலாம். இப்போது சர்க்கரைவள்ளி கிழங்கு பாயாசம் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |