ஆண்களே! விந்தணு பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? இதனை சரி செய்ய இந்த ஆசனத்தை செய்து பாருங்க
இன்று பத்தில் 5 முதல் 4 பேருக்கு விந்தணு குறைபாடு ஏற்படுகிறது. இது பல ஆண்களின் வாழ்க்கையையே புரட்டி போடுகிறது.
இதற்கு காரணங்களாக உணவு, உடை, வாழ்க்கை முறை, மதுப்பழக்கம், புகைப்பழக்கம், கதிர்வீச்சு என்று பலவகையான காரணங்கள் சொல்லப்படுகின்றது.
இதனை தடுக்க என்னத்தான் உணவுகள் மருந்துகள் இருந்தாலும் ஒரு சில உடற்பயிற்சி, யோகாசானங்கள் கூட உதவுகின்றது.
தற்போது விந்தணு பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஆண்கள் செய்யக்கூடிய ஆசனங்கள் என்ன என்பதை பார்ப்போம்.
புஜங்காசனம்
இந்த பயிற்சியை செய்வதற்கு முதலில் குப்புற படுத்து கொள்ளவும். அடுத்து இரண்டு கைகளையும் தோள்பட்டைக்கு நேராக வைத்து கொண்டு தலை மற்றும் மார்பு பகுதியையும் சேர்த்து மேலே தூக்கி மூச்சை இழுத்து விடவும்.
அடுத்து இரு கால்களையும் மேலே தூக்கி மூச்சை இழுத்து விடவும். இவ்வாறு, தலையையும் காலையும் ஒரே நேரத்தில் தூக்கி மூச்சை இழுத்து விட்டால், முன்கூட்டியே விந்து வெளியேறுவதை தடுக்கலாம்.
உடலின் தசைகளை இலகுவாக்கி ஆண்களின் குறைபாடுகளை முற்றிலுமாக நீக்கி விடக்கூடியது. அத்துடன் பிறப்புறுப்பில் அதிக பலத்தை இது ஏற்படுத்தும். மேலும், இல்லற வாழ்வில் ஈடுபட, ஆற்றலை அதிகரிக்க செய்யும்.
பாத கோணாசனம்
முதலில் இரு கால்களையும் நன்றாக நீட்டி உட்கார்ந்து கொள்ளவும். அடுத்து வலது காலை மடக்கி வைத்து கொள்ளவும். அதே போன்று இடது காலையும் மடக்கி வைத்து கொள்ளவும்.
இரு கால்களும் ஒன்றாக இருக்கும் படி பார்த்து கொள்ள வேண்டும். அடுத்து கை விரல்களை சேர்த்து பாதத்திற்கு அடியில் வைத்து கொள்ள வேண்டும்.
இந்த நிலையில் முதுகு எலும்பு நேராக இருக்க வேண்டும். இந்த ஆசனத்தில் 30 நொடிகள் இருக்கவும். அடுத்து நெற்றியை தரையில் வைக்கவும். மெதுவாக மூச்சை இழுத்து கொண்டு ஆரம்ப நிலையில் வர வேண்டும்.
இது உடலின் ரத்த ஓட்டத்தை சீர்படுத்தி இல்லற வாழ்வை இனிமையாக்கும். அத்துடன் விந்தணுவின் ஆரோக்கியத்தை கூட்டும்.
மச்சியாசனம்
முதலில் பத்மாசனத்தில் அமர வேண்டும். அடுத்து, வலது காலை இடது தொடையிலும் இடது காலை வலது தொடையிலும் வைத்து கொள்ள வேண்டும்.
பின், முழங்கைகளை பின்னால் எடுத்து சென்று மேல் நோக்கி, படுத்து கொள்ள வேண்டும். அதன்பிறகு, உடம்பின் மேற்பகுதியை தூக்கி தலையின் உச்சியை தரையில் வைக்க வேண்டும்.
இறுதியாக பழைய நிலையில் வர வேண்டும். இந்த பயிற்சி முறை கிட்டத்தட்ட மீனை போன்ற தோற்றம் கொண்டது. இவை தசைகளை வலுப்படுத்தி அதிக ஆற்றலை தர கூடியதாம்.
குறிப்பாக விந்தணு பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஆண்களுக்கு இவை நிரந்தர தீர்வை தரும். மேலும், விந்து விரைவில் வெளியேறுவதை தடுக்கும்.
தனுராசனம்
முதலில் குப்பற படுக்க வேண்டும். அடுத்து இரண்டு கணுக்காலை கைகளால் பிடித்து கொண்டு, நெஞ்சை மேல் நோக்கி தூக்க வேண்டும். இந்த நிலையில் மூச்சை இழுத்து வெளியில் விடவும்.
இவ்வாறு, வில்லை போன்று உங்கள் உடலை வளைத்து தொடர்ந்து காலை வேளையில் செய்து வந்தால் விந்துவின் நலன் பெருகும்.
இந்த ஆசனம் ஆண்களின் விந்தணுவின் ஆற்றலை அதிகரித்து, முன்கூட்டியே இவை வெளியேறுவதை தடுக்கும்.
சக்கராசனம்
முதலில் முதுகு பகுதி தரையில் படுவது போல படுத்து கொள்ளவும். அடுத்து, உள்ளங்கை தரையை தொடுவது போல வைத்து கொள்ளவும்.
இந்த நிலையில் மூச்சை உள்ளே இழுத்து கொண்டு, உங்கள் முழு உடலையும் மேலே உயர்த்த வேண்டும்.
குறிப்பாக கழுத்து பகுதியையும், கால் பகுதியையும் இரு கைகளின் உதவியோடு கால்களை மேலே முடிந்த வரை உயர்த்தவும். பிறகு மூச்சை மெல்லமாக விடவும். இவ்வாறு செய்து வந்தால் ஆண்களின் இல்லற வாழ்வு இன்பம் பெரும்
இவை விந்தணுவின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், தைராய்டு பிரச்சினைக்கும் சேர்த்தே தீர்வு தருகிறது. உடலின் மெட்டபாலிசத்தை செம்மைப்படுத்த இந்த பயிற்சி முறை மிகவும் உதவுகிறது.