வானில் கோள்கள் உருவாக்க உள்ள புன்னகை முகம் - எப்படி காண்பது?
வானில் அவ்வப்போது பல அரிய நிகழ்வுகள் நடைபெறுவது உண்டு. அதில், சில நிகழ்வுகளை எந்த உபகரணமும் இல்லாமல் சாதாரண கண்களாலேயே பார்க்க முடியும்.
வானில் தோன்றும் புன்னகை முகம்
அதே போல் அரிய நிகழ்வு ஒன்று, வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெற உள்ளது.
அன்றைய தினத்தில், வெள்ளி, சனி மற்றும் பிறை நிலவு சங்கமமாகும் அரிய நிகழ்வு நடைபெற உள்ளது.
வெள்ளி மற்றும் சனி அருகே வரும் போது, அதன் கீழே பிறை நிலா தோன்றும். இந்த நிகழ்வு, புன்னகைக்கும் முகத்தைப்(Smiley Face) போன்ற தோற்றத்தை உருவாக்கும்.
வெள்ளி மற்றும் சனி புன்னைகை முகத்தின் கண்கள் போலவும், பிறை நிலா புன்னைகை உதடு போன்ற தோற்றத்திலும் காண முடியும்.
இவையனைத்தும் பளிச்சென காட்சியளிக்கும் என்பதால் சாதாரண கண்களாலேயே பார்க்க முடியும்.
ஏப்ரல் 25 ஆம் திகதி, சூரிய உதயத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர், கிழக்கு வானில் இந்த அற்புத நிகழ்வை கண்டுகளிக்க முடியும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |