Flipkart-ல் உங்கள் பழைய போனை விற்பது எப்படி? ஈஸியான வழிமுறை இதோ
உங்கள் பழைய போன்களை Flipkart தளத்த்தில் விற்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?
ஆம் உங்கள் பழைய, பயன்படுத்திய செல்போனை பிளிப்கார்ட்டில் நல்ல விலைக்கு விற்கலாம். நீங்கள் நினைப்பதுபோல் இது எக்ஸ்சேஞ்ச் அல்ல, நீங்கள் பதிலுக்கு எந்த பொருளையும் வாங்காமல் உங்கள் போனை Flipkart-ல் விற்க முடியும். அதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அதனை இங்கே பார்க்கலாம்.
கிட்டத்தட்ட அனைத்து பிராண்டுகளும்
Flipkart-ல் பழைய போன்களை விற்பனை செய்ய அந்த ஆப் மூலமாகவே செய்யும் வசதி உள்ளது. இதில் iPhone, Samsung, Real me, Motorola, Oppo, Vivo, One Plus போன்ற அனைத்து பிராண்டுகளையும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
Flipkart
பணம் உடனடியாக கிடைக்கும்
பிளிப்கார்ட்டில் பழைய போனை விற்றால், அவர்களே உங்கள் வீட்டிற்கு வந்து பிக்அப் செய்து கொள்கிறார்கள். பணமும் உடனடியாக கிடைத்துவிடுவது தான் இதன் சிறப்பு.
ஆனால், தற்போது இந்த வசதி இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் இல்லை. எனவே, இதை செக் செய்ய உங்கள் ஏரியா பின் கோடை உள்ளிட்டு சரிபார்த்துக்கொள்ளவேண்டும்.
Flipkart
Flipkart-ல் பழைய போனை விற்கும் வழிமுறைகள்
Flipkart-ல் பழைய போனை விற்க முதலில் app-ஐ ஓபன் செய்ய வேண்டும். பின்னர் நீங்கள் கேட்டகரிக்குச் சென்று Phonecash என்ற விருப்பத்தைத் தேட வேண்டும். அதைத் தட்டினால் உங்கள் போனை விற்கும் ஆப்ஷன் கிடைக்கும்.
பின்னர் இங்கே உங்கள் செல்போன் பிராண்ட் பெயரை டைப் செய்து தேட வேண்டும். நீங்கள் விரும்பினால், பிராண்டின் லோகோவைத் தேர்ந்தெடுத்து அதிலிருந்து சாதனத்தைப் பார்க்கலாம். அதன் பிறகு, உங்கள் தொலைபேசியின் மாடலை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
Flipkart
நீங்கள் தேர்வு செய்தபின், திரையில் தொலைபேசியின் மதிப்பிடப்பட்ட மதிப்பைக் காண்பீர்கள். ஆனால், போனின் உண்மையான விலையை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் சில கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும். போன் எவ்வளவு பழையது? ஏதேனும் சேதம் உள்ளதா? இந்த செயல்முறையை முடித்த பிறகு, நீங்கள் பிக்-அப் விருப்பத்தைத் தொடரலாம் மற்றும் நீங்கள் தொலைபேசியை ஈஸியாக விற்கலாம்.
Flipkart
How to sell old phones on Flipkart, Flipkart Tips, Mobile Phones
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |