முதுகு வலி சார்ந்த பிரச்சினைகளை தீர்க்கனுமா? இந்த மூன்று பயிற்சியே போதும்
முதுகு வலி என்பது நம்மிடையே காணப்படும் சர்வ சாதாரண சொல்லாகும். 90 சதவீத மக்கள் வாழ்வில் ஒரு முறையாவது முதுகு வலி அனுபவிக்காமல் இருந்திருக்க முடியாது.
முதுகுவலி யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். ஆயினும் 25 வயது முதல் 55 வயது உடையோர் அடிக்கடி கூறுவர்.
இதனை போக்க ஒரு சில யோகாசனங்கள் உதவுகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
பிளாங் போஸ்
முதலில் டேபிள் டாப் நிலையில் முட்டி போட்டு இரண்டு கைகளையும் தரையில் ஊன்றி நில்லுங்கள். பின் இரண்டு கால்களை நீட்டி கொள்ளுங்கள்.
உங்கள் கைகளை தரையில் அழுத்தி, ஒரு அடி உடலை பின்வாங்கவும், உங்கள் உடலை தரையில் இணையாகக் கொண்டு வாருங்கள்.
தோள்களை விரித்து உடலானது தரையில் செங்குத்தாக இருககுமாறு பார்த்துக் கொள்ளவும்.
உங்கள் கைகளை தரையில் அழுத்தி, உங்கள் தோள்பட்டைகளை அகலமாக பரப்பவும்.
மார்பைத் திறந்து, முதுகு எலும்பை கீழே இழுத்து, தொடைகளைத் தூக்கி, கால்கள் மூலம் உடலை தாங்குங்கள்.
தலையை முன்னோக்கி வந்து தரையை நோக்கி மெதுவாகப் பாருங்கள். 5 முதல் 10 சுவாச சுழற்சிகளுக்கு இருங்கள்.
இந்த போஸ் அடிவயிற்றுக்கு நன்மை பயக்கும் என்பது மட்டுமல்லாமல், பின்பக்க தசைகளை வலுப்படுத்தவும் பயன்படுகிறது.
நிற்கும் வில் போஸ்
நேராக நின்றுக் கொண்டு உங்களது இடது பக்க காலை பின்னோக்கி தூக்கி கணுக்காலில் இடது கையால் இருக்க பிடித்து கொள்ளவும். உங்கள் உடலை வில்லாக வளைத்து வலது கையை நேராக நீட்டி முத்திரை போட்டு கொள்ளவும்.
மிக ஆழ்ந்து சுவாசிக்கவும். 30-60 வினாடிகள் இதே நிலையில் தொடரவும.பின் கால்களை மாற்றி கொள்ளவும்.
இது தான் வில் முறை யோகா ஆகும். இந்த போஸ் உடற்பகுதியை நீட்டி முதுகெலும்பு மற்றும் பின்புற தசைகளை பலப்படுத்துகிறது.
மவுண்டைன் போஸ்
நேராக நின்று கொள்ளவும். இப்பொழுது உங்கள் இரண்டு குதிகால்களை ஒன்றாக மேலே தூக்கவும். உங்கள் கால்விரல்களை விரித்து, இரு கால்களிலும் உங்கள் உடல் எடையை சமமாக தாங்கவும்.
உங்கள் தோள்களைத் தளர்த்தி, அவற்றை முன்னும் பின்னும் உருட்டவும். உங்கள் கைகளை மேல்நோக்கி தூக்கி கொள்ளவும். ஆழமான சுவாசத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
சில மணி துளிகள் இந்த யோகாவினை செய்தால் போதுமானது. இதுவே முதுகுவலி சார்ந்த பாதிப்பினை தடுக்க உதவுகிறது