வைரம் போல் மினுமினுக்கும் சருமத்திற்கு பாதாம் எண்ணெய் - இரவில் இப்படி செய்தால் போதும்..!
பொதுவாகவே பெண்களுக்கு தங்களது சருமத்தை அழகாகவும் பளபளப்பாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் ஒரு சில குறைப்பாட்டால் அதை சீராக கவனிக்காமல் இருப்பதால் அந்த ஆசையை நிறைவேற்ற முடியாது.
அந்தவகையில் இரவு நேரத்தில் நீங்கள் உங்களுடைய சருமத்திற்கு பாதாம் எண்ணெயை பயன்படுத்தினால் போதும். அது எப்படி என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
பாதாம் எண்ணெயில் என்ன இருக்கிறது?
பாதாம் எண்ணெய் முகம், முடி மற்றும் உடலில் நேர்மறையான விளைவைக் கொண்ட பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.
முகத்தில் உள்ள கறைகள் மற்றும் புள்ளிகளை குணப்படுத்த முடியும்.
முகப்பரு பிரச்சனை இருந்தால், அதை அகற்ற முடியும்.
ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
இரவில் என்ன செய்ய வேண்டும்?
தூங்கச் செல்லும் போதெல்லாம், அதற்கு முன் பாதாம் எண்ணெயை முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும்.
இப்படி செய்வதன் மூலம் சருமத்திற்கான ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
முகத்திற்கு நீங்கள் பயன்படுத்திய மேக்கப்பை நீக்க பாதாம் எண்ணெயை பயன்படுத்தலாம். இது உங்கள் சருமம் வறண்டு காணப்படுவதை தடுக்கும்.
பாதாம் எண்ணெயை முகமூடியாகவும் பயன்படுத்தலாம். அதற்கு ஒரு பாத்திரத்தில் சில துளிகள் பாதாம் எண்ணெய், சிறிது தேன் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து நன்றாக கலந்து உங்கள் சருமத்தில் பூசவும்.
இப்படி செய்வதன் மூலம் உங்களுடைய சருமம் வைரம் போல் மினுமினுக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |