தொங்கும் தொப்பையை ஒரே வாரத்தில் குறைப்பது எப்படி?
பொதுவாகவே அனைவருக்கும் தொங்கும் தொப்பையானது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இது பெரும்பாலும் தவறான உணவுப் பழக்கங்களால் ஏற்படுகிறது.
தவறான உணவுப் பழக்கவழக்கங்கள் தவிர, இதற்குப் பின்னால் பல காரணங்களும் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
தூக்கமின்மை, மன அழுத்தம், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, இன்சுலின் எதிர்ப்பு மற்றும் பல சுகாதார நிலைகளும் தொப்பை கொழுப்பிற்கு காரணமாக இருக்கலாம்.
தொங்கும் தொப்பை தோற்றத்தை கெடுப்பது மட்டுமல்லாமல், பல நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது.
தொப்பை கொழுப்பை குறைக்க, உங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறை மற்றும் பல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
நீங்கள் தொப்பையை எளிதில் குறைக்க விரும்பினால் நிபுணர்கள் கூறும் இந்த விடயங்களை பின்பற்றினாலே போதுமானதாக இருக்கும்.
உதவும் பொருட்கள் என்னென்ன?
கற்றாழை இன்சுலின் வெளியீட்டை அதிகரிக்கிறது. இது இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது.
வெந்தய விதைகள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகின்றன. இவை சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்து தொப்பையை குறைக்கிறது.
கற்றாழையில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்துவதோடு எடையையும் குறைக்கிறது.
உடல் பருமனை தடுக்கும் தன்மை கற்றாழையில் உள்ளது. இது உடலில் சேரும் கொழுப்பை குறைக்க உதவுகிறது.
மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ஏராளமாக உள்ளது. இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து எடையைக் குறைக்கிறது.
வெந்தயம் கூடுதல் கொழுப்பை எரிக்க உதவுகிறது. இது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது. உடலுக்குத் தேவையான புரதம், நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் இரும்புச் சத்துகள் கிடைக்கவும் உதவுகிறது.
தொங்கும் தொப்பையை குறைப்பது எப்படி?
தேவையான பொருட்கள்
-
கற்றாழை ஜெல் - 2 டீஸ்பூன்
- வெந்தய விதை - 1 டீஸ்பூன்
செய்முறை
-
புதிய கற்றாழையில் இருந்து கற்றாழை ஜெல் எடுக்க வேண்டும்.
- 1 கிளாஸ் தண்ணீரில் 2 தேக்கரண்டி கற்றாழை சேர்த்து கலக்கவும்.
- அதனுடன் 1 தேக்கரண்டி வெந்தயத்தை சேர்த்து, இந்த பானத்தை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |