பல வகை நோய்களுக்கு அருமருந்தாகும் வெள்ளைப்பூசணி ! இப்படி எடுத்து கொண்டாலே போதும்
Jaundice
Weight Loss
Kidney Disease
Stress
By Kishanthini
வெள்ளைப்பூசணி பல்வேறு சத்துக்களை தன்னுள்ளே வைத்திருக்கிறது. இதனைக் கொண்டு சித்தா மற்றும் ஆயுர்வேதத்தில் பல மருந்துகளை தயாரிக்கிறார்கள்.
இதில் விட்டமின் பி, சி-யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும் வளமாக நிறைந்துள்ளது. முக்கியமாக இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.
உடலை பலப்படுத்துவதிலிருந்து, புற்றுநோய் வராமல் தடுப்பதுடன் பல்வேறு அதிசயங்களை தன்னகத்தே வைத்திருக்கிறது.
அந்தவகையில் வெள்ளைப்பூசணியை எப்படி எடுத்து கொண்டால் நன்மைகளை பெறலாம் என்பதை இங்கே பார்ப்போம்.
- சிறுநீரக கற்கள் இருந்தால் 50-6- பூசணி விதைகள் எடுத்து தோல் நீக்கி எடுத்து 200 மில்லி மோரில் சேர்த்து அரைத்து குடித்து வந்தால் சிறுநீரக கற்களுக்கு தீர்வாக இருக்கும்.
- வெள்ளை பூசணி சாறு 100 மில்லி அளவு எடுத்து அதில் 10 கிராம் கல்கண்டு சேர்த்து குடித்து வந்தால் சிறுநீர் கழிக்கும் போது உண்டாகும் எரிச்சலை குணப்படுத்தும்.
- ஞாபக மறதி பிரச்சனை இருந்தால் வெள்ளை பூசணியை சாறாக்கி 50 மில்லி அளவு எடுத்து அதில் 1 டீஸ்பூன் நெய் மற்றும் 1 சிட்டிகை அதிமதுரப்பொடி கலந்து 2 முதல் 3 மாதங்கள் வரை சாப்பிட்டு வந்தால் ஞாபக மறதி சரியாகும்.
- தினமும் காலையில் ஒரு டம்ளர் வெள்ளைபூசணி சாறு குடித்துவந்தால் அது அறிவாற்றலை மேம்படுத்தும்.உடலுக்கு ஆற்றலை அளிக்கும். மன அமைதியை அளிக்கும்.
- தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு முலைக்காம்பு புண்கள் உண்டாகும். இதை போக்க வெள்ளைபூசணி பூக்களை எடுத்து அதை புளி இலைகளுடன் மசித்து மார்புகாம்புகளில் தடவினால் அழற்சி சரியாகும்.
- வெள்ளைப்பூசணி சாற்றில் ஏலக்காய் மற்றும் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டை எரிச்சலை போக்கும்.
- வெள்ளை பூசணி சாற்றை அரை தேக்கரண்டி அளவு எடுத்து அதில் அதிமதுரம் கலந்து எடுத்துகொண்டால் வலிப்பு நோய் மருந்தாகும். இதை 7 முதல் 14 நாட்கள் வரை எடுக்கலாம்.
- வெள்ளைப்பூசணி பழச்சாறு 10-20 மில்லி அளவு கற்கண்டு சேர்த்து நாள் ஒன்றுக்கு 2- 3 முறை குடித்து வரலாம். இது அமிலத்தன்மை, எரியும் உணர்வு, இரத்தப்போக்கு கோளாறுகள், சிறுகுடல் புண், சிறுநீர்ப்பை, உடல் முழுவதும் அரிப்பு, நரம்பு பிரச்சனை. அல்சர் போன்றவற்றை சரி செய்ய உதவும்.
- வெள்ளைப்பூசணி பழச்சாறு மற்றும் விதைகள் தோல் நீக்கி தட்டி சாறு எடுத்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து குடிக்கவும். இது உடல் பருமன், வயிற்றுப்புண், அல்சைமர் பிரச்சனைக்கு தீர்வாக இருக்கு.
- வெள்ளைப்பூசணி இலையை தனியா விதைகளுடன் சேர்த்து அரைத்து நாள் ஒன்றுக்கு இரண்டு முறை எடுத்துகொள்வது மஞ்சள் காமாலைக்கு மருந்தாக இருக்கும்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US