நீளமாக கூந்தல் வளர தேங்காய் எண்ணெய்யுடன் இந்த ஒரு பொருள் போதும்.., எப்படி பயன்படுத்துவது?
பொதுவாக பலருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை முடி உதிர்வு தான்.
தலைமுடிக்கு சரியான பராமரிப்பு, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், தூக்க நேரம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
அந்தவகையில், நீளமாக கூந்தல் வளர தேங்காய் எண்ணெய்யுடன் இந்த பொருளை கலந்து தடவினால் போதும்.
1. தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய்- 2 ஸ்பூன்
- விளக்கெண்ணெய்- 2 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து லேசாக சூடாக்கவும்.
பின் உச்சந்தலையில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து ஒரு மணி நேரம் ஊற வைத்து மென்மையான ஷாம்பூ கொண்டு அலசவும்.

இதனை வாரத்திற்கு 2 முறை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முடிக்கு நல்ல பலன் கிடைக்கும்.
இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும்.
2. தேவையான பொருட்கள்
- வெங்காய சாறு- 2 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய்- 3 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் வெங்காய சாறு மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து உச்சந்தலையில் தடவவும்.
பின் 5 நிமிடம் மெதுவாக மசாஜ் செய்து, 30 நிமிடம் அப்படியே ஊற வைத்து மென்மையான ஷாம்பூ கொண்டு தலைமுடி அலசவும்.
இதனை வாரத்திற்கு 2 முறை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முடிக்கு நல்ல பலன் கிடைக்கும்.
வெங்காயத்தில் உள்ள சல்பர் முடி வளர்ச்சிக்கு உதவும் மற்றும் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |