பளபளப்பான சருமத்திற்கு பேரீச்சம் பழம் - எப்படி பயன்படுத்தலாம்?
பொதுவாகவே பெண்களுக்கு தங்களது சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
அதற்காக என்ன செய்வதென்று தெரியாமல் சந்தையில் விற்கப்படும் ஒரு சில பொருட்களை பயன்படுத்தி வருவார்கள்.
ஆனால் அவை அனைத்து நிரந்த தீர்வு தராது. ஆகவே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து முயற்சித்து பார்ப்பார்கள்.
பலரும் சரும பிரச்சனைகளுக்கு வீட்டில் இருக்கும் மஞ்சள், சந்தனம், தக்காளி போன்ற எளிய பொருட்களை பயன்படுத்தி வருவது வழக்கம்.
ஆனால் ஒரு சிலர் தங்களின் சரும ஆரோக்கியத்திற்கு பேரீச்சம்பழத்தையும் பயன்படுத்துகிறார்கள். அது பற்றி பார்க்கலாம்.
சருமத்திற்கு பேரீச்சம் பழம்
ஸ்க்ரப்
4-5 பேரீச்சம்பழங்களை எடுத்து இரவில் ஒரு கப் பாலில் ஊற வைக்கவும்.
பிறகு ஊறவைத்த பேரீச்சம்பழத்தை எடுத்து மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
பின்னர், அதில் ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் ரவை சேர்த்து முகத்தில் தடவவும்.
face pack
சுமார் 4-5 பேரீச்சம்பழங்களை எடுத்து இரவில் ஒரு கப் பாலில் ஊற வைக்கவும்.
பிறகு, அவற்றை மிக்ஸியில் அரைத்து விழுது போல் அரைத்துக் கொள்ளவும்.
ஒரு ஸ்பூன் full-cream பால் மற்றும் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சேர்த்து, பின்னர் கலவையை முகத்தில் தடவவும்.
பேரிச்சம்பழம் சாப்பிடுவதன் நன்மைகள்
- மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கிறது.
- இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- நல்ல கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துகிறது.
- எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.
- ஆண், பெண் இருபாலருக்கும் பாலியல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
- மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
- சோர்வு நீங்கும்.
- இரத்த சோகைக்கு சிறந்தது.
- எடையை அதிகரிக்கிறது.
- மூல நோய் வராமல் தடுக்கிறது.
- வீக்கத்தைத் தடுக்கிறது.
- ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு உதவுகிறது.
- சருமம் மற்றும் முடிக்கு சிறந்தது.
எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும்?
முதலில் 2 சாப்பிடுவது நல்லது. பின்னர் தினமும் 4 ஊறவைத்து சாப்பிடுங்கள்.
உடல் எடையை அதிகரிக்க வேண்டுமானால் தினமும் 4 பேரீச்சம்பழம் சாப்பிட வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |