உடனடியாக முகத்தை வெள்ளையாக்க இந்த ஒரு பொருள் போதும்.., எப்படி பயன்படுத்துவது?
சூரிய கதிர்கள் போன்றவற்றால் முகம் மற்றும் உடம்பு பொலிவிழந்து கருப்பாக மாறுகின்றன.
அந்தவகையில், வீட்டிலேயே இயற்கையாகவே முகப்பொலிவை அதிகரிக்க கிளிசரினை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- கிளிசரின்- 1 ஸ்பூன்
- ரோஸ் வாட்டர்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
ஒரு கிண்ணத்தில் கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டரின் சம பாகங்களை கலக்கவும்.
தினமும் படுக்கைக்குச் செல்வதற்கு முன் இந்த கலவையை ஒரு காட்டன் பஞ்சு பயன்படுத்தி உங்கள் முகத்தில் தடவவும்.
இரவு முழுவதும் இதை அப்படியே விட்டு, காலையில் உங்கள் முகத்தை ஜில் தண்ணீரில் கழுவவும்.
2. தேவையான பொருட்கள்
- கிளிசரின்- 1 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு-1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து வைக்கவேண்டும்.
இதை 15 முதல் 20 நிமிடங்கள் சருமத்தில் அப்படியே விட்டு, பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.
3. தேவையான பொருட்கள்
- கிளிசரின்- 1 ஸ்பூன்
- மஞ்சள்- ஒரு சிட்டிகை
பயன்படுத்தும் முறை
மஞ்சளுடன் கிளிசரின் சேர்த்து கலக்கவும்.
இந்த பேஸ்ட்டை முகத்தில் அல்லது கரும்புள்ளிகளில் தடவி விடவும்.
10 முதல் 15 நிமிடங்கள் இதை ஊற வைக்கவும் பின் வெதுவெதுப்பான நீரில் கழுவிக்கொள்ளலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |