முகப்பரு, கரும்புள்ளிகள் இல்லாத சருமத்தை பெற வேண்டுமா? பச்சை பயற்றை இப்படி பயன்படுத்துங்க!
Facial
Beauty Tips
Pimples
Green Gram
Mung Bean
By Balakumar
பருவ வயதை அடைந்த பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் இருக்கும் பொதுவான ஒரு பிரச்சனை முகப்பரு.
இந்தப் பருக்கள் முகத்தின் அழகை கெடுப்பதுடன் வலியையும் கொடுத்து விடுகிறது.
இந்தப் பருக்களினால் தோன்றும் கரும்புள்ளிகள் முகப் பொலிவையே மங்கச் செய்து விடுகின்றன. இந்த முகப்பருக்கள் வருவதற்கான காரணங்களையும், பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை போக்குவதற்கான சில எளிய வழிகள் என்ன என்பதை பார்ப்போம்.
- 1 ஸ்பூன் பாசிப்பயறு மாவை, எடுத்து அதனுடன் 1/2 ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவுங்கள். 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். தினமும் இதனை தொடர்ந்து செய்து வந்தால் ஒரே வாரத்தில் முகப்பருக்கள் மட்டுமின்றி அதன் தழும்புகளும் மறைந்து விடும்.
- பாசிப்பயறு மாவில் தயிர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கருமையாக உள்ள இடங்களில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். பின்னர் நல்லெண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால் முழங்கை மற்றும் கழுத்துகளில் உள்ள கருமை விரைவில் போய்விடும்.
- 1 ஸ்பூன் பாசிப்பயறு பொடியுடன் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் மாஸ்க் போல் போடுங்கள். 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். தினமும் இதனை செய்து வந்தால் சரும நிறம் அதிகரிக்கும். உங்களுக்கு வறண்ட சருமமாக இருந்தால் எலுமிச்சை சாறுக்கு பதிலாக பால் கலந்து பயன்படுத்தலாம்.
- முகம் மற்றும் வாய்க்கு மேலே மீசை போன்று வளரும் முடியின் வளர்ச்சியை தடுப்பதற்கு பாசிப்பயறு மாவில் மஞ்சள் தூளை சேர்த்து நீர் ஊற்றி பேஸ்ட் செய்து தினமும் காலை மற்றும் மாலையில் முடி வளரும் இடத்தில் தடவி ஊற வைத்து கழுவி வந்தால் நாளடைவில் முடியின் வளர்ச்சி தடைபடுவதை உணரலாம்.
- பாசிப்பயறு பொடியை 1 ஸ்பூன் எடுத்து அதனுடன் ரோஸ் வாட்டரை கலந்து கொள்ளுங்கள். இதனை முகம், கழுத்து பகுதியில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் 20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். தினமும் இரவில் இப்படி செய்து வந்தால் சுருக்கங்கள் மறைந்து இளமையாக காணப்படுவீர்கள்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US