Dandruff: பொடுகு தொல்லையை அடியோடு நீக்கும் பால்; எப்படி பயன்படுத்தலாம்?
பொதுவாகவே பெண்களாக இருந்தாலும் சரி ஆண்களாக இருந்தாலும் சரி அனைவரும் பாதிக்கப்படும் ஒரே விடயம் பொடுகு.
தலைமுடியானது நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும்.
இயற்கையாகவே கிடைக்கும் பொருட்களைக் கொண்டு நம் முடியை அழகாகவும் பளபளப்பாக மாற்றலாம்.
அது போலவே பொடுகு தொல்லையும் இயற்கையான பொருட்களை வைத்து குறைக்கலாம்.
அந்தவகையில் வீட்டில் எப்போதும் இருக்கும் பால் வைத்து எப்படி பொடுகை விரட்டலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
பாலில் கால்சியம், புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட் மற்றும் பல அத்தியாவசிய தாதுக்கள் இருப்பதால் இது ஒரு முழுமையான உணவாக எப்போதும் பார்க்கப்படுகிறது.
பொடுகை விரட்ட எப்படி பயன்படுத்தலாம்?
உச்சந்தலை மற்றும் தலைமுடி ஆரோக்கியமாக இருக்க பால் உதவுகிறது. உங்களது தலைமுடியை பால் வைத்து கழுவ வேண்டும்.
பாலோடு முட்டை கலந்து மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம். அல்லது பால் மற்றும் தேன் கலந்தும் பயன்படுத்தலாம்.
மேலும் பால், தேன், வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்கள் இருந்தால் அவற்றையும் சேர்த்து பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |