இலங்கையை வீழ்த்த வேண்டும்: ஹாங் காங் வெற்றிக்கு பின் பேசிய வங்காளதேச வீரர்
எங்கள் இலக்கு வெற்றி பெறுவதுதான் என ஹாங் காங் அணியை வீழ்த்திய பின்னர் வங்காளதேச வீரர் ஹிரிடோய் தெரிவித்தார்.
வங்காளதேசம் வெற்றி
ஆசியக் கிண்ணத் தொடரின் நேற்றையப் போட்டியில் வங்காளதேசம் மற்றும் ஹாங் காங் அணிகள் மோதின.
முதலில் ஆடிய ஹாங் காங் அணி நிசாகத் கான் 42 ஓட்டங்களும், ஸஷான் அலி 30 ஓட்டங்களும், யாஸிம் முர்தஸா 28 (19) ஓட்டங்களும் விளாச 143 ஓட்டங்கள் எடுத்தது.
தஸ்கின் அகமது, தன்சிம் ஹசன் மற்றும் ரிஷாத் ஹொசைன் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். பின்னர் ஆடிய வங்காளதேசம் 17.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 144 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
டௌஹித் ஹிரிடோய்
அணித்தலைவர் லித்தன் தாஸ் 39 பந்துகளில் 59 ஓட்டங்கள் எடுத்தார். டௌஹித் ஹிரிடோய் (Towhid Hridoy) ஆட்டமிழக்காமல் 36 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 35 ஓட்டங்கள் எடுத்தார்.
பின்னர் பேசிய ஹிரிடோய், "எங்கள் இலக்கு வெற்றி பெறுவதுதான். ஒவ்வொரு அணியும் டி20 போட்டிகளில் தங்கள் நாளினை கொண்டாடலாம். நான் இன்னும் சில பவுண்டரிகளை அடித்திருந்தால், நாங்கள் முன்னதாகவே முடித்திருக்கலாம்.
ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கையை வீழ்த்த வேண்டும். எனவே இந்த கட்டத்தில் ரன்-ரேட் பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை.
தொடரின் ஆரம்பத்தில் விடயங்களை சிக்கலாக்க நாங்கள் விரும்பவில்லை" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |